உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்கெட் உணவுகளில் வாசகம்: மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு

பாக்கெட் உணவுகளில் வாசகம்: மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பாக்கெட்கள் மற்றும் கன்டெய்னர்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த விபரங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த, மத்திய அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளை பெரிய எழுத்துருவில் அச்சிடும் பரிந்துரைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், 2014ல் ஒப்புதல் அளித்தது.இருப்பினும் இது முழுமையான நடைமுறைக்கு வரவில்லை. இதை தொடர்ந்து, பாக்கெட் உணவுப் பொருட்களில் எச்சரிக்கை வாசகத்தை கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உங்களுக்கு பேரக்குழந்தைகள் இருக்கின்றனரா? மனு மீதான உத்தரவு வரட்டும். அப்போது தான் குர்குரே மற்றும் மேகியில் என்னென்ன இருக்கிறது, அதன் மேல் உறை எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவீர்கள். அதில் எவ்வித தகவல்களும் தற்போது இடம் பெறவில்லை.பாக்கெட்கள் மற்றும் கன்டெய்னர்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த விபரங்களை அதில் பெரிய எழுத்துருவில் அச்சிட வேண்டும். இதை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath Kumar
ஏப் 11, 2025 11:25

தரம் என்றால் கிலோ என்ன இல்லை என்பார்கள் அந்த லக்கனத்தில் தன உள்ளது குறிப்பாக உணவு துறை கண்ணுக்கே தெரியாத எழுத்து வடிவில் அச்சிடுவது ஏன் யார்க்கும் தேறிய கூடாது? கேட்டால் உணவு அமைச்சகம் எல்லா விஷயத்தையும் பிரிண்ட் போட சொல்கிறார்கள் அதுனாலதான் என்பார்கள்


Oru Indiyan
ஏப் 11, 2025 10:34

தமிழ் நீதிபதி ஒரு கேள்விக்குறி


rama adhavan
ஏப் 11, 2025 08:55

என்றுமே நடப்பது சந்தேகம். உறையை மட்டும் மாற்ற முயற்சிப்பார்கள். மேலும் உணவு கெடாமல், சுவையுடன் இருக்க இரசாயனம் சேர்ப்பர். இதுவும் நடக்கும்.


தமிழன்
ஏப் 11, 2025 08:29

ஜிஎம்எம் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் எல்லா உணவு பொருட்களின் பேக்கின் மீதும் அதில் சேர்த்திருக்கும் பதார்தங்களின் விவரங்களை பெரிய எழுத்தில் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது


GMM
ஏப் 11, 2025 08:01

பாக்கெட் உணவு பொருட்களின் விவரம் அச்சிட்ட பட்டு வருகிறது. அச்சிட்டு என்ன பயன்? கலாவதி பொருட்கள் விற்பனை உண்டு. தயாரிப்புக்கு அக்மார்க் போன்ற தர கட்டுப்பாடு அவசியம். நீதிமன்றம் குறிப்பிடும் இரு பிராண்டு கெடுதல் உடையது தான் . நீதிபதி இரு பிராண்டு பெயர் மட்டும் மன்றத்தில் குறிப்பிடுவது சரியல்ல? நாடு முழுவதும் தடை செய்ய முடியாது. ஆக்கிரமிப்பு கடைகளில் எந்த தர கட்டுப்பாடும் இருக்காது. ஆட்சியில் அமர இவர்கள் ஓட்டு தேவை. நிர்வாக ஊதாரி செலவிற்கு பண தேவை. கெடுவை விதிப்பது பேப்பர் பயன். ?


raja
ஏப் 11, 2025 07:49

இத கூட முடியல நீங்க என்ன அரசு நடத்துரீங்க ......


vadivelu
ஏப் 11, 2025 08:15

பேசாம ஆட்சியை கொடுக்கலாம்.


rama adhavan
ஏப் 11, 2025 08:40

10 வருடத்திற்கு முன் ஒரு 50 வருடம் நீங்கள் ஆட்சி நடத்தும்போது ஏன் செய்யவில்லை? எனவே சொல்வது எளிது. செய்வது கடினம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை