உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக்போஸ்ட்!

தங்கவயல் செக்போஸ்ட்!

சொந்தமில்லா வீடுகள்!

மாலுாரில் 8,500 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இதுக்காக மனு அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அந்த தொகுதியோட அசெம்பிளிக்காரர் அரசின் கவனத்திற்கு கொண்டு போனார்.கோல்டு சிட்டியில் சொந்தம் இல்லாமல் 30 ஆயிரம் குடும்பங்கள் மைன்ஸ் வீட்டில் நான்கு ஐந்து தலைமுறையாக வாழ்கிறவங்களுக்கு வீட்டு பிரச்னையை தீர்க்கப் போவது யாருன்னு தெரியல. ஆதார், ஓட்டர் ஐ.டி., ரேஷன் கார்டு, அடையாளம் தான் முகவரி, மற்றும் பொசிஷனுக்கு ஆதாரம்.இதை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்குறாங்க. மைனிங் வீட்டு அட்ரசில் தான் நான்கு பேர் அசெம்பிளிக்கு தேர்வானாங்க. இப்பவும் மாஜி அசெம்பிளி குடும்பத்துக்காரங்க மைனிங் வீட்டில் தான் சிலர் இருக்காங்க. இவங்க வீடுகளுக்கும் கூட உத்தரவாதம் இல்லையே.கோல்டு சிட்டியில் வீடுகள் சொந்தம் ஆகும் நாள் சுதந்திர தினமாக இருக்க முடியும். அதுவரை எப்போ யார் காலி செய்வாங்களோ என்ற பீதியில் தான் இருக்க வேணும்னு சொல்றாங்க.

நல்லது நடந்தால் சரி?

கோல்டன் மைன்ஸ் மூடும் போது தொழிலாளிங்க 3,400 பேர். ஆனால் சில சொசைட்டிக்காரங்களிடம் 2,000 பேர் உறுப்பினர்களாம். இதை நம்பணுமாம். புரூடா விட்றதுக்கு மைன்ஸ் காரங்க இன்னும் எத்தனை நாளைக்கு பூம் பூம் மாடுகளாக இருப்பாங்கன்னு நினைச்சாங்களோ.ஒரு சொசைட்டிக்கு சவுத் ஏசியா சுரங்க கூட்டு கம்பெனின்னு பேராம். களவாணி கூட்டத்துக்கு யுனிவர்சல் அளவில் தொடர்பு இருப்பது புதிய தகவலே இல்லையாம்.இவங்களோட செயல்பாடுகளை தேசிய புலனாய்வு அமைப்பு தான் கண்காணிக்க வேணும். பரிவர்த்தனைகள் விவகாரங்கள் என்னவென தோண்டி பார்க்க வேணும். மைன்சை இவங்களாண்ட ஒப்படைக்க வேணுமாம்.அப்படி கவர்மென்ட்டே கொடுத்தால், லாபமாக நடத்த போறாங்களாம். இவங்களோட கோரிக்கையை ம.அரசு ஏற்குமா? அதன் சுரங்க அமைச்சகம் ஓகே சொல்லுமா? இவங்களோட சர்வதேச பின்னணி தான் என்ன? வெளிப்படைத்தன்மையை கோல்டு சிட்டியே எதிர்பார்க்குது.வருது... வருது... செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை பிராஞ்னு சொன்னாங்க. சொன்ன சொல்லு என்னாச்சு. வாய் திறந்தால் புல்லட் ரயில் வேகத்தில் புரூடா விடுறதை ஜனங்க ஏத்துக்கணுமே. வாயில் நுழையாத வெளிநாட்டு கம்பெனிகளை வரவழைப்பதாக சொல்றாங்க. சொல்கிற கூட்டத்தினருக்காவது நல்லது நடந்தால் சரி!

கவுன்சிலர் மாயம்!

நகர பகுதியின் ஒரு கவுன்சிலர் வார்டு பக்கமே தலை காட்றதில்ல. குடிநீரோடு சாக்கடையும் கலக்குதென ஒரு வட்டாரத்துக்காரங்க கூட்டமாக வந்து முனிசி.,யில் கூச்சல் போட்டிருக்காங்க. அலுவலகத்தில் குறையை சொல்லி, தீர்க்க வழியை பாருங்கள். கூச்சல் போடுவதால் பிரயோஜனமே இருக்காதுன்னு முனிசி., பெரிய ஆபீசரு அடக்கினாரு.'குடிநீர் பிரச்னை முனிசி.,க்கு உட்பட்டதல்ல. அதுக்கென தனி வாரியம் இருக்கு. அங்குள்ள ஆபீசரை கேளுங்கள். சிலர் கவுன்சிலரை காணவில்லை என்று கூறினர். நேரா போய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அல்லது அசெம்பிளி மேடம் இடத்தில் புகார் செய்யுங்கள். உங்கள் கோரிக்கைக்கு பலன் கிடைக்கும்'னு சொல்லி அந்த பெரிய ஆபீசரு, ஜனங்கள வெளியேற்றிட்டாரு.

தொழில் பூங்கா வருமா?

ஏபிஎம்சி வேலை தொடங்கி, பாறைகளை உடைத்து சமப்படுத்தி வராங்க. இதில் ஒப்பந்ததாரர் காட்டில் கிரானைட் சிக்கினதால் செம பண மழை தானாம். கோல்டு சிட்டியில் 974 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கும் பணி தொடங்கியதாக தெரியல.இதில் 100 ஏக்கரில் காக்கி பயிற்சி மைய பூமி பூஜை போட்டாச்சு. மற்ற பேக்டரிகள் பற்றிய விபரம் இதுவரையில் எந்த தகவலும் இல்லை. இதில் ரியல் எஸ்டேட் காரர்களும் நோட்டம் போட்டு வராங்களாம். இண்டர் சிட்டி குடியிருப்பு யாருக்குப் போய் சேருமோ. இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேணுமோ?அடுத்த தலைமுறைக்காவது தொழிற்பேட்டையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை