வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆபரேஷன் சிந்தூர் நடந்த பின் அமைக்கப்பட்ட ஏழு குழுக்களில் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர் கட்சிகளும் பங்கு கொண்டு வெளிநாட்டுக்கெல்லாம் போனார்களே மறந்து விட்டதா? அது வேற காங்கிரஸா?
பாகிஸ்தானுடனான கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்கு பின், நான்கு பேர் அடங்கிய குழுவை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். ஆனால், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அப்படி எதுவும் செய்யவில்லை. அப்போதுஇருந்த பிரதமர் வேறு; பா.ஜ., வேறு. ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
புறக்கணிப்பாரா? 
பயங்கரவாதமும், பேச்சும் ஒன்றாக பயணிக்க முடியாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாக்., அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை அமித் ஷா புறக்கணிப்பாரா அல்லது கண்டு களிப்பாரா? அவரது மகன் ஜெய் ஷா நிர்வகிப்பதால், இந்த போட்டி நடக்கலாம். பவன் கெரா செய்தித்தொடர்பாளர், காங்.,
தேர்தல் கமிஷன் கடமை! 
நாட்டில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவது என்பது, தலைமை தேர்தல் கமிஷனின் கடமை. அந்த நம்பிக்கைக்குரிய பொறுப்பை, தேர்தல் கமிஷனுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. அதன்படி தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தும் என, நம்புகிறேன். மீரா குமார் மூத்த தலைவர், காங்.,
ஆபரேஷன் சிந்தூர் நடந்த பின் அமைக்கப்பட்ட ஏழு குழுக்களில் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர் கட்சிகளும் பங்கு கொண்டு வெளிநாட்டுக்கெல்லாம் போனார்களே மறந்து விட்டதா? அது வேற காங்கிரஸா?