உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 நாட்கள் நடந்த  சட்டசபை நிறைவு

8 நாட்கள் நடந்த  சட்டசபை நிறைவு

பெலகாவி: பெலகாவியில் நடந்து வந்த சட்டசபை கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.கர்நாடகாவின் வட மாவட்டங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க, ஆண்டுதோறும் டிசம்பரில் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை கூட்டம் நடக்கும்.இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் டிசம்பர் 9ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாண்டியாவில் கன்னட சாகித்ய மாநாட்டை ஒட்டி, சட்டசபை கூட்டம் ஒன்பது நாட்களாக குறைக்கப்பட்டது.கடந்த 9ம் தேதி கூட்டம் துவங்கியது. 10ம் தேதி முன்னாள் முதல்வர் கிருஷ்ணா இறந்ததால், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 11ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.மற்ற நாட்களில் கூட்டம் நடந்தது. நேற்றுடன் கூட்டம் முடிந்தது. மொத்தம் எட்டு நாட்கள் நடந்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள், அதற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அளித்த பதில் தொடர்பாக சட்டசபை சபாநாயகர் காதர், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி தகவல் வழங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை