உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்;எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி

என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்;எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: ''அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது என் வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று,'' என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் கூறினார்.எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க், இந்தியா வந்துள்ளார். அவர் இன்று உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க் உடன் வந்திருந்தார். அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் அவர்கள் சென்றனர்.ராமர் கோவில் பயணம் குறித்து எரோல் மஸ்க் கூறியதாவது:தனது வாழ்நாளின் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று, இந்தியா அருமையான, அற்புதமான நாடு. இந்திய கலாசாரம், விருந்தோம்பல்,அன்பு, கருணை நிறைந்த மக்கள் கொண்ட நாடாக உள்ளது. இந்தியா ஒரு அற்புதமான இடம். முடிந்தவரை பலர் இந்தியாவுக்கு வர வேண்டும், எங்களிடம் சில வணிக திட்டங்கள் உள்ளன, அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வாறு எரோல் மஸ்க் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 09:10

இந்தியா பல மஹான்கள் வாழ்த்த, இப்போதும் பல மஹான்கள் வாழும் புண்ணிய பூமி ... ஆன்மீக பூமி ..தெய்வ பூமி ..ஆயிரம் ஆண்டுகளாக அந்நியர்களின் படையெடுப்பால் அழியாமல் இந்துமதம் தன்னை காத்துக்கொள்கிறது, உலகத்தினர் அனைவருக்கும் வழிகாட்டுகிறது ... பலநூற்றாண்டுகளுக்கு பிறகு ஒரு இந்து மன்னன் இந்தியாவை ஆள்வது சிறப்பு ...


Kasimani Baskaran
ஜூன் 05, 2025 04:07

ஸ்டீவ் ஜாப் போன்றவர்கள் பலர் இந்த ஆன்மீக பூமியை மிதித்து அதன்பின் வாழ்வின் உண்ணதனிலையை அடைந்தவர்கள்.


venkatesan
ஜூன் 04, 2025 22:23

Great


முத்துபாண்டி
ஜூன் 04, 2025 21:19

இங்கே எலக்ஷன்ல நில்லுன்ங்க. கண்டிப்பா கெலிப்பீங்க.


N Sasikumar Yadhav
ஜூன் 05, 2025 10:37

உங்க கோபாலபுர குடும்ப எஜமான் மாதிரியே யோசிக்கிறீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை