உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலாளிகளின் முதலாளி : மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா

தொழிலாளிகளின் முதலாளி : மனதை விட்டு நீங்காத ரத்தன் டாடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவிய முதலாளியாக திகழ்ந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று மும்பை தனியார் மருத்துவமனையில் காலமானார்.1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011- - 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன.சொந்த கார் என்ற கனவு ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்ததை மாற்றியவர் ரூ.1 லட்சத்தில் டாடா நானோ காரை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆண்டுதோறும் நன்கொடைகளை அள்ளி கொடுத்தார். பல்வேறு அறக்கட்டளைகளுக்கு டாடா நிறுவனம் சார்பில் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.வாழும்போதே கோடிகளை கொட்டி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார். ஏழைகளுக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட ரத்தன் டாடா அள்ளி அள்ளி கொடுத்த நன்கொடைகள் ஏராளம்.இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகள் மீது ரத்தன் டாடாவுக்கு தனி அக்கறை என்பது இருந்து வந்தது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை தனது நிறுவனம் மூலம் ரத்தன் டாடா வழங்கினார்.இப்படி பெரும் கோடீஸ்வரராக இருந்தாலும் கூட ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடனே வாழ்ந்து தனது சகாப்தத்தை முடித்து கொண்டார். இதனால் ரத்தன் டாடா தொழிலாளிகளின் முதலாளி. மறைந்த ரத்தன் டாடா 4 விஷயங்களுக்கு வெட்கப்படக்கூடாது என கூறியுள்ளார். அவர் சொன்ன 4 விஷயங்கள் என்ன என்பது கீழே தரப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா சொன்ன 4 விஷயங்கள்

01.பழைய ஆடைகள்; எந்த ஆடையும் உங்களின் திறமையை தீர்மானிக்காது, 02.ஏழை நண்பர்கள்: நட்பில் அந்தஸ்து என்பது ஓன்றுமில்லை, 03.வயதான பெற்றோர்: அவர்கள் தான் நீங்கள் இங்கு இருப்பதற்கு காரணம்,04. எளிய தோற்றம்: வெற்றியை தோற்றம் தீர்மானிப்பது இல்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

selvendran
அக் 10, 2024 19:45

திரு ரத்தன் டாட்டா அவர்கள் இழப்பு தான் இந்தியாவின் உண்மையான இழப்பு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவத்துக்கொள்கிறேன்.


S.V.Gobalakrishnan
அக் 10, 2024 19:15

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தன் நிறுவனங்களில் வேலையளித்து அவர்களின் குடும்பங்களை வாழவைத்து விளக்கேற்றிய ஒரு உன்னத மனிதர். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன் நிறுவன முன்னேற்றத்துக்கும் அதன் மூலமாக பாரத நாட்டின் வளர்ச்சிக்கும் தன் பங்கை அர்ப்பணித்த மாமனிதர்.அவர் நம்நாட்டு மக்களின் இதயங்களில் வீற்றிருப்பார்.அவருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி.அவர் ஆத்ம சாந்தியடைந்து ஈசனின் திருவடியை அடைவாராக. ஓம் சாந்தி


Sivagiri
அக் 10, 2024 18:38

மனிதர்களுக்கு தேவையான அனைத்தும் செய்தார் - ஒரே ஒரு துறையை மட்டும் செய்யவில்லை - மதுபான தொழிற்சாலை - -


C S K
அக் 11, 2024 03:58

திறமை அதுவும் அருமை


Saravanakumar c
அக் 10, 2024 17:22

இந்தியாவின் பெருமை டாடா அவர்கள்.அவரின் மனித நேயத்தினால் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர்.ஓம் சாந்தி.


M S RAGHUNATHAN
அக் 10, 2024 15:46

My daughter was employed in TCS and was in their Mumbai office. Her marriage was fixed and she was distributing the invitation to her friends in the cafeteria. Suddenly, Ratan Tata entered and asked what is happening? My daughter went to him and told about her marriage and gave him an invitation. He was happy and asked her what her future husband was doing and when he learnt he was working in Chennai he told her Manager to immediately transfer my daughter to Chennai. On the day of marriage a bouquet of flowers was received by us. That was Ratan Tata.


Rajagopal Vsr
அக் 10, 2024 15:44

பாரதம் என்றால் டாடா, பிர்லா, சிறிய குழந்தை பருவத்தில் இருந்து நாம் அனைவரும் மிகவும் பெருமையாக பேசுவது நம் பாரத நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் மற்றும் அதன் மாபெரும் சிறப்பு மிக்க தலைவர்கள்.என் பாரத தேசத்தின் மேன் மை மிகுந்த, எங்கள் தொழில், தொழில்நுட்பங்களின் தந்தை, எங்கள் தொழில் தந்தை பத்மபூஷன் ஶ்ரீ ரத்தன் டாடா ஜி அவர்களின் இழப்பு, என் தந்தையின் இழப்பு போன்று என் மனம் பறிதவிக்கிறேன் . எங்கள் பாரத மக்கள் அனைவரும் இந்த மனநிலையில் இருந்து தவிப்பதை சத்தியம், உண்மை, இறைவன் மீது பக்தி இவற்றில் அளவு கடந்த நம்பிக்கை உள்ளவர்கள், நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டில் நடந்த இழப்பு தான் என்று உணர்கின்றேன்றோம். ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திஹி


vnatarajan
அக் 10, 2024 14:14

தொழிலாளிகளின் முதலாளி என்பதைவிட டாடா தொழிலாளிக்கு தொழிலாளியாக வாழ்ந்தவர் என்பதே பொருந்தும்.


magan
அக் 10, 2024 13:44

இந்தியாவின் பெருமை டாடா RIP sir


lana
அக் 10, 2024 12:17

RIP


ஆரூர் ரங்
அக் 10, 2024 11:43

வாரிசு அரசியல்வியாதிகள் போல தத்தி குடும்ப வாரிசுகளின் கையில் அளிக்காமல் நிறுவனங்களின் மேலாண்மையை திறமையான நிர்வாகிகளுக்கு அளித்து வளர்த்தவர். இதில் மற்றவர்களுக்கு முன்னோடி .


SANKAR
அக் 11, 2024 05:15

Ratan himself nephew of JRD and Noel Tata who is taking over now is his half brother.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை