உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணத்திற்கு மெட்ரோ ரயிலில் சென்ற மணப்பெண்

திருமணத்திற்கு மெட்ரோ ரயிலில் சென்ற மணப்பெண்

பெங்களூரு: சரியான நேரத்தில் திருமண மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, மெட்ரோ ரயிலில் மணப்பெண் சென்று உள்ளார்.பெங்களூரு வாகன நெரிசல் அதிகம் நிறைந்த நகரம். நெரிசல் மிகுந்த சாலைகளில், ஒரு கிலோ மீட்டர் துாரத்தை கடக்க, 1 மணி நேரம் கூட ஆகும். இதனால் வாகன ஓட்டிகள் நொந்துவிடுவர்.போக்குவரத்து நெரிசலுக்கு வரப்பிரசாதமாக வந்தது தான், மெட்ரோ ரயில். போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி, வாகனங்களில் செல்வதற்கு பதிலாக, மெட்ரோ ரயிலில் ஏறி 'ஈசி'யாக சென்றுவிடலாம் என்றே, நகரவாசிகள் நினைக்கின்றனர்.இந்நிலையில் 'பார்எவர் பெங்களூரு' என்ற கணக்கில் உள்ள 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.அந்த வீடியோவில், மணக்கோலத்தில் இருக்கும் பெண், திருமண மண்டபத்திற்குச் செல்வதற்காக குடும்பத்தினர், நண்பர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார். அந்த வீடியோவில் மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண்ணின் கார், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.இதனால் அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, முகூர்த்த நேரத்திற்குள், திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த வீடியோவை பார்ப்பவர்கள் லைக்குகளை தட்டி விடுகின்றனர். அந்த மணப்பெண்ணுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன், சமயோஜித புத்தியுடன் செயல்பட்டதாகவும் கருத்து பதிவிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி