உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.23,500 கோடி மதிப்புள்ள அரிசியை தமிழகத்திற்கு வாரி வழங்கிய மத்திய அரசு

ரூ.23,500 கோடி மதிப்புள்ள அரிசியை தமிழகத்திற்கு வாரி வழங்கிய மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர் களுக்கு, 2020 முதல் இம் மா தம் வரை, 78 லட்சம் டன் அரிசி, 5 லட்சம் டன் கோதுமையை, மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், அரிசி பிரிவில் உள்ள, 93 லட்சம் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், தலா, 5 கிலோ அரிசி; 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, தலா, 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர, முன்னுரிமையற்ற பிரிவுக்கு, 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.ரேஷனில் வழங்க மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை. அந்தியோதயா, முன்னுரிமை பிரிவுகளுக்கான, 1.90 லட்சம் டன் அரிசியை, மத்திய அரசு கிலோ, 3 ரூபாய் விலையில் தமிழக அரசுக்கு வழங்கியது. மீதி, முன்னுரிமையற்ற பிரிவுக்கான அரிசியை, தமிழக அரசு கிலோ, 30 ரூபாய்க்கு வாங்கியது.கடந்த, 2020ம் ஆண்டு துவக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அந்த ஆண்டு மார்ச் இறுதியில், மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் முன்னுரிமை, அந்தியோதயா பிரிவினருக்கு, ஏற்கனவே வழங்கப்படும் அரிசியுடன் சேர்த்து, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக, 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது.இதற்காக, இந்திய உணவு கழகம், தமிழகத்திற்கு மாதம், 1.80 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்கியது. அந்த ஆண்டு டிசம்பரில் இருந்து, கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், 2023 டிசம்பர் வரை கூடுதல் இலவச அரிசி வழங்கப்பட்டது.பின், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அந்தியோதயா மற்றும் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கான அரிசியை, மாநில அரசுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது.இதன் வாயிலாக, 2020 ஏப்ரலில் இருந்து, இம் மாதம் வரை, 78.34 லட்சம் டன் அரிசி, 5.53 லட்சம் டன் கோதுமையை, தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.சராசரியாக கிலோ அரிசி விலை, 30 ரூபாய், கோதுமை, 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், 23,500 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோதுமை, இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஆக 28, 2025 11:58

ஆமாம் மத்திய பிஜேபி அரசு தஞ்சாவூரில் ஐம்பதாயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து அப்படியே அறுத்துத் தள்ளி வைத்து உள்ளனர், அப்படியே வாரிக் கொடுக்க! மாநில அரசுகளை கொள்ளை அடித்து சேர்த்த பணம் தானே, கொடுக்க வேண்டியது தான்!


Madras Madra
ஆக 28, 2025 11:05

மோடி தமிழ் நாட்டிற்க்கு என்ன செஞ்சாரு என்று ஊளையிடும் நரிகள் கவனத்திற்கு


arunachalam
ஆக 28, 2025 10:43

ஸ்டிக்கர் ஒட்ட நிறைய வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் மத்திய அரசு. இவர் நன்றி கெட்டவன் அய்யா


Yadhav
ஆக 28, 2025 09:26

35 கிலோ இலவச அரிசி வேலம்பட்டு கிராமம் 632204 பணக்காரர்கள் வாங்குகிற மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் பஞ்சாயத்து தலிவர்கள்


Barakat Ali
ஆக 28, 2025 08:32

உங்க சோத்துல ஸ்டிக்கரை ஒட்டி தமிழனையே [பாஜக ஒயிக] ன்னு சொல்ல வெச்சிரும் எங்க விடியலு .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2025 08:07

எப்படியும் [ஒண்ணுமே கொடுக்கல ...... எதுவும் கொடுக்கல] ன்னு சொல்லத்தான் போறாங்க ......


VENKATASUBRAMANIAN
ஆக 28, 2025 07:45

ஸ்டிக்கர் ரெடி.


T.Senthilsigamani
ஆக 28, 2025 07:41

நல்ல செய்தி .ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என ஒப்பாரி வைக்கும் போலிமதசார்பின்மை கூட்டங்கள் இந்த செய்தியை படிக்கட்டும்


Mecca Shivan
ஆக 28, 2025 07:21

கடலில் கொட்டப்படும் பொக்கிஷம். ஏற்கனவே பல ஆயிரம் டன் கொழுமுதல் செய்யப்பட்ட நெல் மற்றும் அரிசிமூட்டைகளை பாழடித்த தமிழக அரசை நம்பிய இந்த வேலை.. ரேஷன் அரிசியை திட்டுட்டுத்தனமாக வெளி மார்க்கெட் அரிசி என்று பொய் லேபிளுடன் ஆப்பிரிக்காவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் அரசியல் மாநில மத்திய அரசாங்க அதிகாரிகளின் திருட்டு கூட்டணிக்கு அடித்தது ஜாக்பாட் .. இப்படி செய்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்த மண்ணை மாபியா வும் உண்டு


சந்திரன்
ஆக 28, 2025 07:03

மத்திய அரசு இலவசமாக தந்த அரிசியை திராவிட மாடல் அரசு வீடுதோரும் அனுப்பி ஸ்டிக்கர் ஒட்டும்


சமீபத்திய செய்தி