உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் பிரச்னை: கேரள அரசுடன் பேச்சு நடத்த தயார் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கடன் பிரச்னை: கேரள அரசுடன் பேச்சு நடத்த தயார் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,கடன் உச்ச வரம்பு விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கேரள அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காண தயார் என, மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் வாங்குவதற்கு மத்திய அரசு உச்ச வரம்பு விதித்திருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, கடந்த மாதம் 12ம் தேதி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.அதில், 'பொது நிதி மேலாண்மை என்பது தேசிய பிரச்னை. மாநிலங்கள் கடன் வாங்குவது, நாட்டின் கடன் மதிப்பீட்டை பாதிக்கிறது. மேலும், எந்தவொரு மாநிலமும் கடனை திருப்பிச் செலுத்த தவறினால், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த நிதி கட்டமைப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்' என, குறிப்பிட்டிருந்தது.இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள், ''இவ்விவகாரத்தில் கேரள அரசின் நிதித்துறை செயலர், மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தி சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா,'' என, கேள்வி எழுப்பினர்.இதைக்கேட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, ''உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று கேரள அரசுடன், எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது,'' என்றார்.இதற்கு கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பேச்சு நடத்த தயார் என தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் தங்கள் பிறப்பித்த உத்தரவில், 'மத்திய நிதியமைச்சருடன் கேரள அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடத்தி முடித்தபின் அடுத்த வாரத்தில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sridhar
பிப் 14, 2024 12:14

ஒரு மாநில அரசின் நிதி நிர்வாகமும் மத்திய அரசின் நீதித்துறையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்குக்கூட கோர்ட் அறிவுறுத்தல் வேண்டுமா? ஏன், நேரடியாக பேசமாட்டேன் என்று டு விட்டுக்கொண்டார்களா? மத்திய அரசும் கோர்ட் கூறியதை ஏற்று சரி என்று கூறுவது இதற்க்கு முன் பேச மறுத்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது இது சம்பந்தமான கொள்கை முடிவுகள், மற்ற மாநிலங்களின் நிலைமை ஆகியவற்றை விளக்கி சொல்லி புரியவைப்பதற்கு இவர்களுக்கு தெரியாதா? மேலும் மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது RBI சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? மத்திய அரசு எங்கே வருகிறது?


Anand
பிப் 14, 2024 12:00

எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்......


ஆரூர் ரங்
பிப் 14, 2024 11:07

மாநில அரசுகள் வாங்கும் அந்நியக் கடன்களுக்கு மத்திய அரசு உத்திரவாதம் அளிக்கிறது. அதுவும்????‍???? மத்திய அரசின் கடன் கணக்கில் ஏற்றப்படுகிறது. ஆக பாதிப்பு மத்திய அரசுக்குத்தான். . பாவம் ஒரு இடம். பழி ஓரிடம்.


Varadarajan Nagarajan
பிப் 14, 2024 08:04

மாநிலங்கள் தங்கள் இஷ்டத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளில் கடன் வாங்க முழுவதுமாக தடை விதிக்கவேண்டும். வளர்ச்சித்திட்டங்கள் என கடன் வாங்கி நிதியை மடை மாற்றுவது, மற்றும் திட்டங்களில் கமிஷன் அடித்து சொத்து சேர்த்து மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றுவது பல மாநிலங்களில் நடந்து வருகின்றது. இதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதுபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படும் இலவசங்களுக்கு தடை செய்ய வேண்டும். இதுவும் மக்கள் வரிப்பணம்தான். அதுவும் மக்களிடம் வரிச்சுமையை ஏற்படுத்துகின்றது. இதில் ஊழலும் நடக்கின்றது.


visu
பிப் 14, 2024 07:55

மக்களும் முட்டாள்கள் வரவுக்கு மீறி கடன் வாங்கும் மாநிலங்கள் அதை எப்படி திரும்ப செலுத்தும் அந்த சூழ்நிலை வந்தால் வரிகளை உயர்த்தி சாதாரண மக்களை நசுக்குவார்கள் .அரசுகள் வருமானத்துக்கும் செலவு செய்யவேண்டும் ஊழியர் ஊதியம் ஓய்வூதியம் அரசின் ஆடம்பர செலவுகள் ஓட்டுக்காக இலவச அறிவிப்புகள் காரணமாக தான் கடன் வாங்குகிறார்கள் என்ன புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள் ? ஒருகாலத்தில அரசாங்கம் டிவால்தான் ஆகும் அப்போது மக்களாகிய நாம்தான் குறிப்பாக அரசு ஊழியரல்லாத பொது ஜனம்தான் சகல துன்பங்களையும் அடைய நேரிடும்


Dharmavaan
பிப் 14, 2024 07:21

இது கொள்கை பற்றியது.இதில் நீதிமன்றம் தலையிடுவது தவறு.வரம்பு மீறல்.


Dharmavaan
பிப் 14, 2024 07:20

ithu


J.V. Iyer
பிப் 14, 2024 06:17

எதிர்க்கட்சிகள் நடத்தும் அரசுகள், மக்கள் பணத்தை சுருட்டி, அரசுகளை கடனாளி ஆக்குகின்றன. மஹா கேவலம். மக்கள் தூங்குகிறார்களா?


Ramesh Sargam
பிப் 14, 2024 00:08

கபில் சிபல் தனக்கு என்று இருந்த அந்த நல்ல பெயரை இதுபோன்ற எதிர்க்கட்சியினர் தரப்பாக வாதாடி அந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒன்று, இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் வழக்கறிஞர்களில் இவர் நம்பர் ஒண்.


Bye Pass
பிப் 13, 2024 23:56

கபில் சிபல் வாதாட கேரளா அரசாங்கம் எத்தனை லட்சங்கள் தருகிறது ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை