உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய மக்களின் இரக்க குணம்: பிரிட்டன் பயணியின் பதிவு வைரல்

இந்திய மக்களின் இரக்க குணம்: பிரிட்டன் பயணியின் பதிவு வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய மக்களின் இரக்க குணம் குறித்து பிரிட்டன் பயணியின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.பிரிட்டனை சேர்ந்த அலெக்ஸ்வாண்டர்சிட் என்பவர், இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து, பல்வேறு மக்களையும் சந்தித்தது குறித்து தனது அனுபவங்களை வாழ்க்கை நியாயமானது அல்ல என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில் இந்தியாவில் நிலவும் கடுமையான சூழல், வறுமை, செல்வம் இரண்டும் இருப்பதும், சமூக வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்திய மக்களின் உண்மையான இரக்கம், மகிழ்ச்சி, பெருந்தன்மை ஆகியவை தனக்கு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானது.நெட்டிசன்கள் அலெக்ஸ்வாண்டர்சிட் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
டிச 10, 2025 21:13

நல்லவேளை இவர் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. சந்தித்திருந்தால் இவர் இப்படி பேசி இருக்க மாட்டார்.


Skywalker
டிச 10, 2025 18:22

விருந்தினர்கள் தெய்வங்கள். This is the root culture of our country , happy that there are some influencers who just don't talk about the negetives of India


சமீபத்திய செய்தி