உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஹிம்சை பதிவை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட காங்.,

அஹிம்சை பதிவை வெளியிட்டு வாங்கி கட்டி கொண்ட காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திற்கு பின், கர்நாடக காங்., தலைமையகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'மனித குலத்தின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி' என குறிப்பிட்டு இருந்தது. நம் ராணுவத்தினர் பதிலடி தந்த நேரத்தில் இப்படியொரு பதிவை வெளியிட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சுதாரித்த காங்., தலைமை அந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டு, நம் விமானப் படையைப் பாராட்டி மற்றொரு பதிவை வெளியிட்டது.அதில், 'உலகின் வலிமையான விமானப்படைகளில் ஒன்றாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டது நம் இந்திய விமானப்படை. பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கோழைத்தனமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. நாங்கள் அரசுடன் துணை நிற்கிறோம்; எங்கள் பாதுகாப்பு படைகளுடன் நிற்கிறோம்' என, குறிப்பிட்டு இருந்தது. ஆனாலும், பிரச்னையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் கர்நாடக காங்., பதிவிட்ட கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kalaiselvan Periasamy
மே 08, 2025 06:17

காங்கிரஸ் தடை செய்யப்பட வேண்டிய ஒரு கட்சி .


வாய்மையே வெல்லும்
மே 08, 2025 06:14

சும்மா பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். காந்தி அவர்களின் நெருங்கிய சொந்தங்களை பாக்கிஸ்தான் அரசு எல்லையில் தென்பட்டவர்களை பிடித்துக் கொண்டு ஹிம்சை செய்கின்றார்கள் என்ன சொன்னால் காந்தி அடிகளே.. தன்னோடைய தடியை உபயோக படுத்தி இருப்பாரு. இதுதானுங்க தானடாவிட்டால் தன்சதை ஆடும் என முன்னோர்கள் சான்றோர்கள் குறிப்பு வைத்துள்ளனர். சும்மா அஹிம்சை சால்ஜாப்பு இங்கே ஏற்றுக்கொள்ளப்படாது என தமிழக சமூகம் கர்நாடக கருநாக கான்கிரஸ் அரசியல் வ்யாதியஸ்தர்களுக்கு சொல்ல கடமை பட்டுள்ளது. இப்படியே போச்சுன்னா .. காங்கிரஸ் கர்நாடகத்தில் காணாமல் போக வாய்ப்பு அதிகம். உங்க ஆட்டத்தை அப்படியே நிறுத்தினால் உங்களுக்கும் உங்க கட்சிக்கும் நல்லது .


Sathyan
மே 08, 2025 06:10

முதலில் காங்கிரஸ் மோகன்தாஸ் காந்தி இந்திய நாட்டுக்கு விடுதலை வாங்கி தந்தார் என்ற பதிவை மக்களின் மனதில் இருந்த அகற்ற வேண்டும். சொல்லப் போனால் காந்தி ஆங்கிலேயருக்கு ஒரு அடிமையாக இருந்தாரே தவிர வேறன்ன சொல்வது. ஆங்கிலேயன் ஆட்சியில் எத்தனை இந்தியர் கொல்லப்பட்டார்கள் என்று கணக்கு எடுத்தால் அது பல லட்சங்கள் செல்லும். இப்படி இருந்தவன் காந்தியின் அஹிம்சை போக்கினால் ஒரே இரவில் சுதந்திரம் கொடுத்தான் என்று மக்களை நம்பவைத்த காங்கிரஸ் தலைவர்களை எப்படி சாடினாலும் தகும். அவ்வழியில் வந்த இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் இப்படி தான் மற்ற நாடுகளுக்கு அடிவருடிகளாக இருப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் நமக்கு வேண்டாம்.


Karthik
மே 08, 2025 05:56

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இந்த காங் கிராஸ் காரன்கள்..


Kasimani Baskaran
மே 08, 2025 03:51

காங்கிரஸ் கேடிகள் திருந்த வாய்ப்பில்லை. பொது மக்கள் தர்ம அடி கொடுத்தால் திருந்துவார்கள்.


Priyan Vadanad
மே 08, 2025 00:53

சுத்த விவரங்கெட்ட கருத்துக்களை பதிவிடுவதில் அர்த்தமேயில்லை. அஹிம்சை மிகவும் உயர்வானதுதான். ஆனால், பொருத்தமில்லாத இடத்தில் அஹிம்சையை பற்றி எழுதியோ பேசியோ மக்களை இம்சைப்படுத்துவதில் அப்படியென்ன சுகமோ. காந்திகூட இந்த சூழ்நிலையில் உயிரோடு இருந்தால் அஹிம்சையை கொஞ்சம் பக்கத்தில்தான் வைத்திருப்பார் என்று நினைக்கிறன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை