உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டாய மதமாற்றத்தை அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை: அலகாபாத் ஐகோர்ட்

கட்டாய மதமாற்றத்தை அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை: அலகாபாத் ஐகோர்ட்

பிரயாக்ராஜ்: ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தாலும், கட்டாய மதமாற்றத்தையோ, மோசடியான மதமாற்றங்களையோ அது ஏற்கவில்லை என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உ.பி.,யில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கடந்த 2021ல் அமல்படுத்தப்பட்டது. அங்குள்ள சிலரை பணத்தாசை காட்டியும், இலவச மருத்துவ வசதி வழங்குவதாக கூறியும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியதாக நால்வர் மீது, இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தள்ளுபடி

இதையடுத்து, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நால்வரும் வழக்கு தொடர்ந்தனர். கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராகவும் மனுவில் குறிப்பிட்டனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், நால்வர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது. நால்வரின் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், போலீஸ் விசாரணைக்கு ஏற்றவை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 25ன் கீழ், ஒவ்வொருவரும் பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரத்துக்கு உட்பட்டு தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், பிரசாரம் செய்யவும் அடிப்படை உரிமை உண்டு. இதில், 'சுதந்திரமாக' என்பது மத நம்பிக்கையின் தன்னார்வ தன்மை. அதாவது, அரசியலமைப்பு சட்டமானது, கட்டாய மதமாற்றம் மற்றும் மோசடி மதமாற்றங்களை அங்கீகரிக்கவில்லை; மத பிரசாரம் என்ற போர்வையில் நடைபெறும் ஏமாற்று நடைமுறைகளுக்கு அது பாதுகாப்பு வழங்கவில்லை. ஒரு மதம் மற்றொன்றை விட உயர்ந்தது என்பது, மதச்சார்பின்மை கருத்துக்கு எதிரானது. இந்திய மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்ற கொள்கையில் வேரூன்றிஉள்ளது.

ஏற்புடையதல்ல

பலவந்தம், மோசடியான வழிமுறைகள், செல்வாக்கு உள்ளிட்டவை வாயிலாக மதமாற்றம் செய்வது மற்றும் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு ஒருவரை மாற்றுவதற்காகவே திருமணம் செய்வது போன்ற வற்றை தடுப்பதே,கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் நோக்கம்.இதன் வாயிலாக சமூக நல்லிணக்கத்தில் ஏற்படும் சீர்குலைவுகளை தடுக்க, இந்த சட்டம் முயற்சிக்கிறது.உ.பி., கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் - 2021ன் கீழ், பாதிக்கப்பட்டவர் அல்லது நெருங்கிய உறவினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்ற வாதம் ஏற்புடையதல்ல. கைது செய்யும் வகையிலான குற்றங்களில், போலீஸ் அதிகாரியும், தாமாகவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

J.Isaac
மே 20, 2025 15:32

ஆறு அறிவு உள்ளவர்களை கட்டாயப்படுத்த முடியுமா?


GMM
மே 20, 2025 08:00

பிறப்பால் மக்கள் இந்து மதம் சார்ந்து இருக்க வேண்டும். பிற மத மக்களை இந்து மதம் ஏற்பது இல்லை. கிருத்துவ, இஸ்லாம் மதம் பிறரை ஏற்கும். மத மாற்றம் இந்துக்களுக்கு பொருந்தாது. கிறித்துவ, இஸ்லாம் மதம் மக்கள் மட்டும் தான் மத மாற்றம் அனுமதிக்க வேண்டும். ஒருவர் இரு சாதி, இரு மதத்தில் இருக்க முடியாது. மத மாற்றம் நிகழ்ச்சி அரசு அதிகாரிகள் முன் மற்றும் ஆவணத்தில் இருக்க வேண்டும். பிற சுய நடைமுறைகள் குற்றம்.


J.Isaac
மே 20, 2025 15:38

மாந்திரீகம், செய்வினை, ஏவல் , பில்லிசூனியம், மாய கயிறுகள் எல்லாம் செய்து குடும்பங்களை சீரழிக்கிற மக்கள் எந்த மதத்தில் அதிகம். விடுதலை பெற மாற்று வழி தேடுவது சகஜம். அது அவர்களது உரிமை


அப்பாவி
மே 20, 2025 07:46

கட்டாய மதமாற்றத்தை எதிர்க்கவும் இல்லை. அரசியல் அமைப்பை திருத்துங்கள். காசு குடுத்தா எந்த மதத்திற்கும் மாறுவார்கள் ஏழைகள்.


J.Isaac
மே 20, 2025 17:24

காசு கொடுத்தா மாறுவான் என்றால், காசு கொடுத்து தானே ....போகிறான்.


Kanns
மே 20, 2025 07:41

Ban Retrospectively All Religious Conversions Out of Nature-MultiForces/Gods Worshipping Plural Secular Pagan Religions


Kulandai kannan
மே 20, 2025 06:41

'பிரச்சாரம் செய்வதற்கு உரிமை' என்பதை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். தத்தமது மதத்தை பின்பற்றும் உரிமை மட்டுமே போதுமானது.


Kasimani Baskaran
மே 20, 2025 03:42

மதம் மாறினால் ஜாதி மாறுகிறது. ஆனால் இன்று பலர் பழைய சலுகைகளையே அனுபவித்து வருகிறார்கள். நிச்சயம் இது தண்டனைக்கு உரிய குற்றம்.


Priyan Vadanad
மே 20, 2025 05:33

நீங்களும் கொஞ்சம் நல்ல காரியங்களை பண்ணுங்கள். எல்லோருக்கும் சம மரியாதையை கொடுத்து நடத்துங்கள். தானும் நல்லது செய்யாமல், செய்பவரையும் தடுத்துக்கொண்டு, எளிய மக்களை மட்டமான நிலையிலேயே வைத்திருந்தால் என்ன செய்வது.


J.Isaac
மே 20, 2025 15:28

நாட்டில் குடிகாரனை கொலைகாரனை திருடனை திருத்துவது தப்பு.


J.Isaac
மே 20, 2025 15:30

ஜாதி மாறுவதில்லை


சமீபத்திய செய்தி