உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிகளை மட்டுமே கணக்கெடுக்க முடிவு?

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிகளை மட்டுமே கணக்கெடுக்க முடிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2027ல் நடத்தப்பட உள்ள நிலையில், ஜாதிகளை மட்டுமே கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'சென்சஸ்' எனப்படும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக, கடந்த 2011ல் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, 2021ல் நடக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், அதை உடனடியாக நடத்த வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதேசமயம், ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன. இந்நிலையில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்றும், அதோடு சேர்த்து ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும், மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு மாநிலத்தில், ஓ.பி.சி., என வகைப்படுத்தப்பட்ட பிரிவு, மற்றொரு மாநிலத்தில் பொதுப்பிரிவில் வருகிறது.ஜாதி வகுப்புகளை பிரிப்பதில் மாநிலங்கள் இடையே பாகுபாடு நிலவுவதால், ஜாதிகளை மட்டுமே கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.நெறிமுறைப்படி, ஒவ்வொரு தனிநபரும், தங்கள் ஜாதியை மதத்துடன் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வழக்கமாக ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த முறை டிஜிட்டல் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், அது மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sabesan Umapathy
ஜூன் 08, 2025 09:14

When government is insisting for eless among us why to such cencess, Is it necessary to provide reservations based on population which seems to be injustice for minor community of e, inwhich case who will revail their e ly when they will affect very badly and if people are not coperative for how the cencess will end in sucessful, instead of that they mearly take the strength of population which will not hurt the feelings of the common man, instead continueing the reservations till endless period country will grow up with effective and competative, wherein only right persons gets the opportunity and growth of our country in the justfied manner


Padmasridharan
ஜூன் 08, 2025 08:32

இதனால என்ன பயன். ஒரு பக்கம் கல்விதான் சாலச்சிறந்ததுனு சொல்லிக்கிட்டு ஜாதிகள் இல்லையடி பாப்பானு பாடிய இந்நாட்டு மக்களை கேவலமாக நடத்துவதற்கா. . சாமி


தாமரை மலர்கிறது
ஜூன் 08, 2025 03:11

ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிடுவது நல்லது.


புதிய வீடியோ