உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் மேப்பால் நேர்ந்த விபரீதம்; பள்ளத்தில் கவிழ்ந்தது பஸ்; கேரளாவில் இருவர் உயிரிழந்த சோகம்!

கூகுள் மேப்பால் நேர்ந்த விபரீதம்; பள்ளத்தில் கவிழ்ந்தது பஸ்; கேரளாவில் இருவர் உயிரிழந்த சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கண்ணனூரில் கூகுள் மேப் பார்த்து நாடக குழுவினர் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர்.கூகுள் மேப் பார்த்து வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் அடிக்கடி நேர்ந்து வருகிறது. ஒருபக்கம், மேப் பார்த்து வாகனங்களை இயக்கி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மறுபக்கம் 'கூகுள் மேப்'பால் சிலர் தவறான வழியில் இரவு நேரங்களில் சிக்கி பரிதவிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்தவகையில், கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.டிரைவருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப் பார்த்து பஸ்சை இயக்கி உள்ளார். கண்ணனூரில் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காயங்குளத்தைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதியதும், பஸ்சில் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த இருவர் பலியாகினர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 'கூகுள் மேப்' பார்த்து வாகனங்களை இயக்கி, விபத்தில் சிக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போல், இனி விபத்து நிகழ கூடாது என்பது அனைவரது விருப்பம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
நவ 15, 2024 17:29

பிச்சையை கூப்பிட்டு விழா நடத்தலாம்.


ديفيد رافائيل
நவ 15, 2024 17:13

Google map பயன்படுத்தும் போது நம்முடைய சொந்த அறிவையும் பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் இப்படி தான் நடக்கும்.


Suppan
நவ 15, 2024 14:53

அந்த இடத்தில் உள்ள தடைகள், வானிலை, சாட்டிலைட் தாக்கம் ஆகியவற்றைப் பொறுத்து கூகுளை மாப்ஸ் உடைய வழிகாட்டி துல்லியம் மாறுபடும். நம்முடைய சொந்த அறிவையும் உபயோகப்படுத்த வேண்டும் .


Saai Sundharamurthy AVK
நவ 15, 2024 13:52

பெரும்பாலும் கேரளா முழுவதும் மலைகளும், பள்ளதாக்குகளும், பள்ளம், மேடுகளும் நிறைந்த பகுதி. சீரான நிலம் உள்ள பகுதிகள் மிகவும் குறைவு. ஆகவே, கூகுளை நம்பி இறங்க கூடாது. கூகுளுக்கு பள்ளம், மேடு, மலை எல்லாம் தெரியாது.


தமிழ்வேள்
நவ 15, 2024 13:46

தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி மாவட்ட மற்றும் கிராம சாலைகளில் கூட வழிகாட்டி பலகைகள் உள்ளன ..அப்புறம் எதற்கு கூகிள் ? வாய் இருக்கிறதே , வழி கேட்க முடியாதா ? இவர்களாக கூகிளை நம்பி பள்ளத்தில் விழுந்தால் அதற்கு இவர்கள்தான் பொறுப்பே தவிர .............


SUBRAMANIAN P
நவ 15, 2024 13:43

கூகுளை 100 சதவீதம் நம்பாமல் அக்கம் பக்கம் விசாரித்து தான் செல்லவேண்டும். சில நேரங்களில் ரோடே இல்லாத இடங்களில் வழி இருப்பதாகவே கூகிள் காட்டும். அப்போதுதான் இதுபோல அசம்பாவிதங்கள் நடக்கிறது.


visu
நவ 15, 2024 19:58

ஆக்கிரமிக்கப்பட்ட வழிகளையும் அது இப்பவும் இருப்பதாக காட்டும்


Balasubramanian
நவ 15, 2024 13:31

ஒரு முறை நாங்கள் காளஹஸ்தியில் இருந்து திருப்பதி வழியாக பெங்களூர் செல்ல விழைந்த போது கோவில் வழி நடத்தி கூகுள் எங்களை காய்கறி மார்க்கெட்டில் நுழைந்து அடுத்த தெருவில் செல்ல வழி காண்பித்தது! எங்கள் பெரிய ஹோண்டா கார் மார்க்கெட்டில் நுழைந்து வெளியே வருவதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் பிடித்தது! அங்கு நல்ல மனிதர் ஒருவர் நிறுத்தி இருந்த வாகனங்களை அகற்றி வழி ஏற்படுத்தி தந்தார் - இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க மாநகராட்சி கூகுள் உபயோகிப்போர் மாற்றுப் பாதையில் செல்லவும் என்று ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் அனைவருக்கும் நல்லது!


Smba
நவ 15, 2024 13:18

யாரிடமாவது கேட்டு போக வேண்டியதுதானே மேப்ப பாத்து தான் ஓட்டனுமா


அசோகன்
நவ 15, 2024 13:07

கூகிள் map பார்த்துதான் uber ola டிரைவர்கள் ஓட்டுக்கிறார்கள் ஆனால் எந்த அசம்பாவிதமும் நடப்பதிலை காரணம் அதற்கு எற்றார் போல் மொபைல் போன் செட்டப் உள்ளது....... அது இல்லாத போது அருகில் உள்ளவர் அந்த map ஐ பார்த்து வழி சொல்லியிருக்க வேண்டும்...... எல்லோரும் குறட்டை விட்டு தூங்கினால் அப்புறம் இப்படித்தான் ஆகும்


கனோஜ் ஆங்ரே
நவ 15, 2024 13:37

////கூகிள் map பார்த்துதான் uber ola டிரைவர்கள் ஓட்டுக்கிறார்கள் ஆனால் எந்த அசம்பாவிதமும் நடப்பதிலை -// uber ola வாகனங்கள் ஓடுவது சென்னை போன்ற சிட்டியில்... அது சமவெளி பிரதேசம்... இவர்கள் சென்றது மலையும் மலைச்சார்ந்த இடமான கேரள மாநிலம்... ரொம்ப அதிகம் படிச்சா புத்தி பேதலிச்சிடும்”..னு பெரியவங்க சொல்வாங்க... அதுக்கு காரணம், மதயானைக்கு மதம் பிடிப்பதைப் போல படித்துவிட்ட கர்வமும், தலைக்கணமும், திமிரும் மூளையிலும், புத்தியிலும் ஏறிவிடும். அதுனால கண்மண் தெரியாம... கூகுள் மேப்..தான் புத்திசாலின்..னு உன்னைப் போன்ற மெத்த படித்த மேதாவிகள் நினைத்தன் விளைவுதான், இரண்டு மரணமும், பதினைந்துபேர் படுகாயமும். போகிற வழியில் உள்ள கிராமம் மற்றும் ஊர்களில் உள்ள மக்களிடம் நின்று வழி கேட்டால்... உங்க வீட்டு சொத்து குறைஞ்சிடுமா.. இல்ல... அவர்களிடம் கேட்பது கௌரவ குறைச்சலா? இதுமாதிரிதான் கடந்த வாரம், சென்னை அடுத்த புழலில்... படிச்ச அறிவாளியான என் உறவினருடன் ஒரு தொழிற்சாலை முகவரி தேடி சென்றேன்... அவனோ கூகுளை நம்பினான்.... நான் அப்போதே சொன்னேன்... சாலையில் உள்ள அந்த ஊரில் உள்ள கடையிலோ அல்லது குடியிருக்கும் மக்களிடமோ வழி கேட்டு போகலாம்..னு கேட்டேன்... என் உறவினனோ.. படித்துவிட்டோம் என்ற திமிரும், கையில் மொபைல் உள்ள ஆணவமும், “செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்”ங்ற வடிவேல் காமெடி கதையா.. கூகுள் மேப் இருக்குற தைரியத்துல... போய்ட்டேன் இருக்கான், லெப்ட், ரைட்டு, ஸ்ட்ரையிட்...டுன்னு ஒரே இடத்தில் சுத்தி சுத்தி வந்துட்டிருக்கான்... எனக்கு கோபம் பொத்து கொண்டு வந்து காரைவிட்டு இறங்கி கோபத்தில் கத்திவிட்டு... தெருமுனையில் இருந்த ஒரு வீட்டில் உள்ள பெரியவரிடம் வழி கேட்டேன்... தம்பி, நீங்க இந்த பக்கம் வந்தது தப்பு... நீங்க வந்த கொல்கத்தா பிரதான சாலையில் எதிர்புறம் போனால் அங்குதான் நீங்கள் குறிப்பிடும் தொழிற்சாலை இருக்கு...?...ன்னு விளக்கமா வழியை சொன்னார்... இந்த கிறுக்கனோ... “இல்லையே கூகுள் மேப் இந்த ரோடு வழியைத்தான் காட்டுது..ன்னு” அந்த பெரியவரிடம் வியாக்கினாம் பேசி விவாதம் செய்தான்.. எனக்கு பயங்கர கோபம் வந்து... “எல்லாம் தெரியும்னு படிச்சுட்டு உலாத்துற உன்ன மாதிரி தலைக்கணமும், திமிரும் உள்ள தறுதலைகூட வந்தது தப்பா போச்சு... காரை நிறுத்தி அங்கிருக்கும் மனிதர்களிடம் வழியை கேட்பதை விட்டுவிட்டு... கூகுள்மேப்பில் வழி தேடுறியே..? அறிவில்லடா”.. திட்டிய பிறகு.. அந்த பெரியவர் சொன்ன வழியில் சென்ற பின்னர் சரியான இடத்தை அடைந்தோம்... அதுபோல...இந்த கூகுள் மேப்..பை நம்பினவனுங்களுக்கு இதுபோல சொர்க்கம், நரகத்திற்குத்தான் போய் சேருவார்கள்...


Natchimuthu Chithiraisamy
நவ 15, 2024 13:07

ஒரு கிராம பாதையில் இரு வழித்தடங்கள் இருக்கும் குறைந்த தூரத்தை கூகுல் காட்டும் ஆனால் அது குறுகலான வழியாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை