உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவை உலுக்கிய இரட்டை கொலை; பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்

கேரளாவை உலுக்கிய இரட்டை கொலை; பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்

பாலக்காடு: கேரளாவில், பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொன்ற நபர், சிறையில் இருந்து வெளியே வந்து கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாராவை சேர்ந்தவர் சுதாகரன், 55. இவரின் மனைவி சுஜிதாவை, பக்கத்து வீட்டில் வசித்த செந்தாமரா என்பவர், 2019ல் கொலை செய்தார். தன்னுடைய மனைவி பிரிவதற்கு முக்கிய காரணமாக சுஜிதா இருந்ததால், அவரை கொலை செய்ததாக செந்தாமரா கூறியிருந்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில், சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து செந்தாமரா ஜாமினில் வெளியே வந்தார்.

வலியுறுத்தல்

இதற்கிடையே, மனைவி இறந்த பின் மறுமணம் செய்த சுதாகரன், இரண்டாவது மனைவி, தன் தாயார் மற்றும் இரு மகள்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தார்.சிறையில் இருந்து செந்தாமரா வெளியே வந்ததை அடுத்து, அவரால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை வேறு இடத்தில் குடியேற வைக்கும்படி சுதாகரன் குடும்பத்தினர் போலீசாரை கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி சுதாகரன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த செந்தாமரா, அவரையும், 75 வயதான அவரது தாயார் லட்சுமியையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து செந்தாமரா தலைமறைவானார். சுதாகரனின் இரண்டாவது மனைவி மற்றும் மகள்கள் அகிலா, அதுல்யா ஆகியோர் வெளியே சென்று இருந்ததால், உயிர் தப்பினர். நெம்மாரா அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த செந்தாமரா, சில பொருட்களை எடுக்க தன் வீட்டிற்கு வந்தபோது போலீசாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

அச்சம்

'மனைவியை கொலை செய்ததால், என்னை கொன்றுவிடுவார் என்ற பயத்தில் சுதாகரனை கொலை செய்தேன். என்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியையும் கொல்ல திட்டமிட்டு இருந்தேன். 'அதற்குள் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்' என, செந்தாமரா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொலை நடந்த வீட்டில், மீண்டும் இரட்டைக் கொலை நடந்துஉள்ளது பாலக்காடு மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N.Purushothaman
ஜன 30, 2025 15:03

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னுசொல்லி உருட்டிகிட்டே இருந்தால் இப்படித்தான் நடக்கும் ..


Indian
ஜன 30, 2025 12:46

நூறு கொலை பண்ணினாலும் இந்த நாட்டில் தண்டனை கிடைக்காது .


ram
ஜன 30, 2025 11:01

நீதி அரசர்கள் இதுபோல ஆட்களுக்கு எதற்கு ஜாமீன் கொடுக்கிறார்கள், இங்கு போரூர் இதுபோல இன்சிடென்ட் நடந்தது, ஜாமினில் வந்த கொலைகாரன் அவன் அம்மாவை போட்டு தள்ளி விட்டான்.


Venkatesan Ramasamay
ஜன 30, 2025 10:57

அவ பேச்சை கேட்டுக்கிட்டுதான் இவன் பொண்டாட்டி ஓடியதால் வந்த வினைதான் இவ்வளவுக்கும் காரணம் ...


AMLA ASOKAN
ஜன 30, 2025 09:28

இந்த கொலை செயல் எல்லாம் ஒரு தனி நபரின் மன நிலையை பொறுத்தது. ஒருவர் மற்றொருவருக்கு இடைஞ்சல் தருவது, நிம்மதியை கெடுப்பது, ஆத்திரத்தை உண்டாக்குவது, மன அழுத்தத்தைத் தருவது, குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்துவது, சண்டையை மூட்டுவது போன்ற செயல்களை செய்வதால் பாதிக்கப்பட்டவர் பழிவாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அடுத்து அவர் என்ன செய்வார், என்ன செய்யக்கூடும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. போலீசோ, நீதிமன்றமோ குற்றம் செய்தவரை தூக்கிலிட்டாலும் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை. அந்த குடும்பத்தை கவ்விய சோகம் வாழ் நாள் முழுவதும் நீடிக்கத்தான் செய்யும் . மக்கள் மற்றவருடன் அன்பாக பழகவேண்டும் . பகைமையை வளர விடக்கூடாது . அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு .


ராம்நாயர்
ஜன 30, 2025 08:44

உடாதீங்க. தோண்டித் துருவி விசாரியுங்க. கொலை செய்வதற்கு முன் எந்த கடையில் கப்பையும், டீ யும் குடிச்சான்னு கண்டு புடிங்க. அதே கடைக்கு கூட்டிட்டு போய் திரும்ப டீ குடிக்க வையுங்க. இப்பிடியே ஒரு நாலு அஞ்சு வருஷம் ஓட்டுனா ஜட்ஜ் ஐயாவும் வாய்தா குடுத்து போரடிச்சுப் போய் பாரதிய நியாய சம்ஹிதை படி குற்றமற்றவன்னு விடுதலை செஞ்சுருவாரு. இல்லே குற்றவாளியே போரடிச்சு தூக்கு மாட்டிக்குவான்.


அப்பாவி
ஜன 30, 2025 08:24

இரு முணு மாசம் சிறையில் வெச்சு கடுமையா தண்டிச்சு விடுதகை செய்யுங்கன்னு நம்ன நியாய சம்ஹிதா சொல்லும். கோர்ட் அதே தீர்ப்பை வழங்கும். செத்தவங்களுக்கு நியாயம் கிடைச்டுரும். நாடு வெளங்கிடும்.


VENKATASUBRAMANIAN
ஜன 30, 2025 07:54

நமது நாட்டில் நீதிமன்றங்கள் திருத்த பட வேண்டும். பழைய உளுத்துப்போன சட்டங்கள் உள்ளன. இதற்கு மாற்று வேண்டும். தண்டனை உடனே கிடைக்க வேண்டும்.


visu
ஜன 30, 2025 07:51

இந்த வழக்கை ஒரு 10 வருடம் நடத்துவார்கள் இதெல்லாம் எல்ல அப்பிலும் ஒரே வருடத்தில் முடிந்து அடுத்த வருடம் தூக்கில் போட வேண்டிய வழக்கு


Kasimani Baskaran
ஜன 30, 2025 07:48

கொலை செய்தவனுக்கு ஐந்தாண்டில் ஜாமீன்... வெளங்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை