உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் மோசடியில் முதியவர்களே பாதிப்பு

ஆன்லைன் மோசடியில் முதியவர்களே பாதிப்பு

பெங்களூரு: 'ஆன்லைன்' மோசடிகளில் முதியோரே அதிகம் சிக்குவது தெரியவந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன், என்.சி.ஆர்.பி., எனும் தேசிய குற்றப்பதிவு ஆணையகம் வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் மோசடிகளில் அதிகம் பாதிக்கப்பட்டது முதியோரே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முதியவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் தளத்தை சரிவர உபயோகிக்க தெரியாததால், இதுபோன்ற மோசடிகளில் சிக்குகின்றனர். மேலும், போலீஸ் அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் என்ற பெயரில் போலியான நபர்கள், அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதாகவும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு போலீசார் ஒவ்வொரு சனிக்கிழமையும், பெங்களூரு முழுதும் வெவ்வேறு இடங்களில், ஆன்லைன் மோசடிகள் பற்றி முதியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.கடந்த சனிக்கிழமை அன்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 180 பேர் கலந்து கொண்டனர். அப்போது, 'சைபர் குற்றங்களில் சிக்காமல் எப்படி இருப்பது, ஆன்லைன் பாதுகாப்பு' போன்றவை பற்றி கற்றுத்தரப்பட்டது.போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், “60 முதல் 70 வயது உடைய முதியவர்களே ஆன்லைன் மோசடிகளில் அதிகமாக சிக்குகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ