உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புகழ்பெற்ற தால் ஏரி கடும் குளிரால் உறைந்தது

புகழ்பெற்ற தால் ஏரி கடும் குளிரால் உறைந்தது

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி கடும் குளிரால் உறைந்தது.ஜம்மு - காஷ்மீரில், வழக்கத்தை விட இந்த முறை அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், ஸ்ரீநகரில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான தால் ஏரி, கடும் குளிரால் உறைந்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, ஸ்ரீநகரில் குறைந்தபட்சமாக, மைனஸ் 7 டிகிரி செல்ஷியஸ், அதிகபட்சமாக 7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், வரும் நாட்களில் கடுமையான குளிர் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் கடுங்குளிரால், பொது மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
டிச 24, 2024 08:28

சீனாவில் பல பகுதிகளில் ஏரிகள் குளிர்காலத்தில் உறைந்துவிடும் - அதன் மீது சொகுசாக சைக்கிள் விட்டு விளையாடுவார்கள். அதே போல குளிர் இல்லை என்றாலும் இது ஒரு மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை