உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை நடுவே மரங்களை வெட்டாமல் ரூ.100 கோடிக்கு ரோடு போட்ட அரசு

சாலை நடுவே மரங்களை வெட்டாமல் ரூ.100 கோடிக்கு ரோடு போட்ட அரசு

பாட்னா : பீஹாரில் சாலை நடுவே உள்ள மரங்களை வெட்டாமல், 100 கோடி ரூபாய் செலவு செய்து புதிய சாலை அமைத்திருப்பது, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள ஜெஹனாபாதில் சாலை விரிவாக்கப் பணி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாட்னா - கயாவை இணைக்கும் 7.48 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, சமீபத்தில் 100 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புத்தம் புது தார் சாலையாக இது பளபளத்தாலும், அதை பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர். சாலையின் நடுவே வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களை அகற்றாமல் சாலை போடப்பட்டதே அதற்கு காரணம். ஏன் இப்படி செய்தனர் என கேட்டால், அதற்கு பின் ஓர் கதை உள்ளது. இங்கு, 100 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்த ஜெஹனாபாத் மாவட்ட நிர்வாகம், சாலை நடுவே மற்றும் சாலையோரம் உள்ள மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த வனத்துறை, அப்படி அகற்ற வேண்டுமானால், 35 ஏக்கர் நிலத்தை இழப்பீடாக கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த மாவட்ட நிர்வாகம், மரங்களை வெட்டாமல், மீதமுள்ள பகுதிகளில் சாலை பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், சாலை நடுவே பிரமாண்ட மரங்கள் நிற்கின்றன.மொத்தம், 100 கோடி ரூபாய் செலவு செய்தும், சாலையை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படுவது நிச்சயம். மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 01, 2025 11:02

7.5 கிமீ சாலை போட 100 கோடி. சராசரியாக ஒரு கி மீக்கு 14 கோடி. வாழ்க பீகார் பொருளாதார அரசியல்


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 01, 2025 09:51

ராமராஜ்யம் NDA கூட்டணி அரசு லட்சணம் ஒருத்தன் 90 டிக்ரீயில் பாலம் கட்டுறான்... இன்னொருத்தன் 100 கோடி ரூபாயை இப்படி வீணடிக்கிறான்.. இதுவல்லவோ ராமராஜ்யம் ... அக்மார்க் டபுள் எஞ்சின்


Yaro Oruvan
ஜூலை 01, 2025 08:49

ரெண்டு குரூப் இங்க கொஞ்சம் ஜாஸ்தியா ஆடுறானுவ..ஒன்னு மனித உரிமை கும்பல் இன்னொன்னு பசுமை தீர்ப்பாய குரூப்.. கொம்பு மொளச்சி ஆடுறானுவ.. இப்போ ஒரு சின்ன ஆக்சிடன்ட் .. பாதுகாப்புக்காக வெட்டிப்போடுங்க. எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றனவோ அதை விட 3 மடங்கு மரங்கள் நெடுஞ்சாலை துறை சார்பாக நடப்பட்டு பராமரிக்க வேண்டும். எவ்வளவோ இடம் உள்ளது .. ரோடு வேணாம் என்பதை எற்க கூடாது.. வெட்டப்படும் மரங்களை விட அதிக மரங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்து கண்காணிக்கவேண்டும் .. ஜைஹிந்.. முடிந்தால் மேலே சொன்ன ரெண்டு அமைப்பையும் கலைத்துவிட்டால் நல்லது ...


Rajan A
ஜூலை 01, 2025 07:32

ரோடும் போடனும், மரங்களையும் காப்பாற்ற வேண்டும். என்னே புதிய வழிமுறை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை