உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி; வெறும் தபால்காரர் அல்ல: மத்திய அரசு வாதம்!

கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி; வெறும் தபால்காரர் அல்ல: மத்திய அரசு வாதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கவர்னர் என்பவர் வெறும் தபால்காரர் அல்ல. அவர் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்,'' என்று, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில், மத்திய அரசு வக்கீல் வாதிட்டார்.சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு 2வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது, 'அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் கவர்னர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அந்த மசோதா தோல்வியடைந்ததாக அர்த்தம். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னருக்கு 4 வாய்ப்புகள் உள்ளன. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தல், ஒப்புதலை நிறுத்தி வைத்தல், மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புதல் அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட விருப்பங்கள் உள்ளன. கவர்னர் ஒப்புதலைத் தடுத்து நிறுத்தும்போது, மசோதா நிறைவேறாது. கவர்னர் வெறும் தபால்காரர் அல்ல. அவர் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்,' என்று மத்திய அரசு தரப்பு வக்கீல் துஷார் மேத்தா வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள், 'சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு நிரந்தரமாக ஒப்புதல் அளிக்காமல் இருக்க கவர்னருக்கு அதிகாரம் இருந்தால், ஒரு தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில அரசை கவர்னரின் தன்னிச்சையான விருப்பு, வெறுப்புகளுக்கு ஆளாக்கும். இது கவர்னர் மற்றும் சட்டசபை அதிகாரங்களுக்கு எதிரானது,' என்று கூறினர். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நாளை (ஆக.,21) ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

venugopal s
ஆக 21, 2025 14:03

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அதிக அதிகாரம் உள்ளவரா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அதிக அதிகாரம் கொண்டதா என்பது தான் பிரச்சினை! இதற்கு ஒரே தீர்வு ஆளுநர் நியமனம் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதே!


V RAMASWAMY
ஆக 21, 2025 10:16

கவர்னர் தேவையில்லை என்று வாதம் புரிகிறவர்கள், முதல்வரே தேவையில்லை என்று மந்திரிகளும், தலைமை ஆசிரியரே தேவையில்லை என்று ஆசிரியர்களும், தந்தை சொற்படி நடக்கத்தேவையில்லை என்று பிள்ளைகளும் கூற ஆரம்பித்தால் முடிவேது? முட்டாள்கள் தான் இம்மாதிரி குதர்க்கமாக நினைப்பார்கள்.


பேசும் தமிழன்
ஆக 21, 2025 09:07

ஒரு வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு எதுவும் வைக்காத நீதிமன்றம்... நாட்டின் ஜனாதிபதி முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.... அவரவர் எல்லைக்குள் இருப்பது... அனைவருக்கும் நல்லது.


MUTHUKUMAAR
ஆக 21, 2025 05:28

கணம் உச்ச நீதிமன்ற தலைமை நீதியநசர் அவர்களே,நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வகையான வழக்குகளுக்கும் மூன்று மாத காலம்தான் என்று கட்டாயமாக்கினால், நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்காதே-செய்வீர்களா-செய்யமாட்டீர்கள்,ஏனெனில் உங்களுக்கு ஒரு நியாயம், கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு ஒரு நியாயம் அப்படித்தானே. இதை எந்த சீனியர் வக்கீலாவது உச்ச நீதிமன்றத்தில் ரிட் போட்டு நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார்களா?


Mani . V
ஆக 21, 2025 05:16

இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது தானே யுவர் ஹானர்? ஏனென்றால் தமிழகக் கவர்னரை ஆளும் சர்வாதிகார ஆட்சியினரும், அந்தக் கட்சியின் வாழ்நாள் கொத்தடிமைகளும் பலமுறை அவமானப்படுத்தி உள்ளார்கள். ஆனால், நடுவண் அரசு அந்த சர்வாதிகார ஆட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எது புரிந்துணர்வுக் கூட்டணிக்கட்சி என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லையா?


Gurumoorthy
ஆக 20, 2025 21:55

First the President should ask what is the timeline set for each judges to close cases, how many cases are lying pending for years and what are the reasons. If this data available the efficiency of all judges and judiciary in India will get exposes and show it is just spineless and overacting entity. A lower court judge denies bail, SC judge grants bail, unfortunately both say they are the custodian of Constitution. A mockery of common man in India.


MUTHUKUMAAR
ஆக 21, 2025 05:38

Very good question. Any Judge can reply


தாமரை மலர்கிறது
ஆக 20, 2025 20:58

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரால் நியமனம் செய்யப்பட்ட கவர்னருக்கு முதல்வரை விட அதிக அதிகாரம் உள்ளது.சுப்ரிம் கோர்ட் என்ன தீர்ப்பு சொன்னாலும், இந்திய தேசத்தை எதிர்த்து போடும் திட்டங்களுக்கு கவர்னர் அனுமதி கொடுக்க மாட்டார்.


venugopal s
ஆக 20, 2025 20:34

வாதம் புரிவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம். அரசியல் சாசனத்தின் படி எது சரி என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யட்டும்!


ஆரூர் ரங்
ஆக 20, 2025 20:33

உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளியை ஸ்டாலின் அமைச்சராகவே தொடரவிட்டார். அப்படிப்பட்ட அமைச்சரவை எப்படி நியாயமான நல்ல சட்டங்களை நிறைவேற்றும்? அப்படிப்பட்ட குற்றவாளிகளின் உ‌த்தரவுகளில் ஆளுநர் எதற்கு கையெழுத்து போட வேண்டும்? மோசமான ஆட்சி செய்யும் அரசுகளைக் கலைக்கும் 356 பிரிவை கோர்ட் ஒன்றுமில்லாமலடித்து விட்டது. இப்போது கவர்னருக்குள்ள மிச்சம் மீதி அதிகாரங்களையும் பிடுங்கினால் என்னாகும்? காஷ்மீர் அரசியல்வாதிகள் பெரும்பாலும் பிரிவினைவாத, பயங்கரவாத குழுக்களுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள். வடகிழக்கிலும் மாநிலக் கட்சிகள் மறைமுக பிரிவினைவாதம் செய்கின்றன. பிரிவினைவாத அரசியலில் தமிழகமும் விதிவிலக்கல்ல. உறுதியான மத்திய அரசும் கவர்னர்களும் இருந்தால் மட்டுமே நாடு பாதுகாப்பாக இருக்கும். இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் ஒதுங்கியிருப்பது நல்லது.


Karthik Madeshwaran
ஆக 20, 2025 20:06

திமுக அரசு ஆட்சிக்கு வந்து, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கும் கவர்னரிடம் அனுப்பிய மசோதா இன்றுவரை ராஜ்பவனில் தூங்கி கொண்டிருக்கிறது. இன்றுவரை கவர்னர் அந்த பைலில் கையெழுத்து போடாமல் ஊழல் வாதிகளை காப்பாற்றுகிறார். அது சம்பந்தமாக இந்த தினமலர் பத்திரிக்கையிலையே இருமுறை செய்தி வெளியானது. மறுக்க முடியுமா ? மறைக்க முடியுமா ? இப்போது முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவது யார் ? இதையும் நீங்கள் வணங்கும் கடவுள் பார்த்து கொண்டுதானே இருக்கிறார் ? நீங்கள் எல்லாம் ஊழலை பற்றி பேசலாமா ? திமுக + அதிமுக இரண்டும் ஊழல் முற்றிய கழிசடைகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை