உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!

கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கர்நாடகாவில் 3 நாட்களுக்கும், கேரளாவிற்கு 2 நாட்களுக்கும் அதி கன மழை முன்னெச்சரிக்கை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின், கேரளாவில் பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளதால், அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவில், கோழிக்கோடு, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைபெய்தது. இதனால், சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன; மின்கம்பங்களும் சாய்ந்தன. இரவு முழுதும் கொட்டி தீர்த்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்தது. கர்நாடகாவில் 3 நாட்களுக்கும், கேரளாவிற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R.K.Thenmozhi 1-B
மே 25, 2025 15:38

Malai neer uyir neer save the water


ديفيد رافائيل
மே 25, 2025 14:10

Heavy rain தான் ரொம்ப கஷ்டமா இருக்கும், இப்ப இருக்கிற climate very super.


ديفيد رافائيل
மே 25, 2025 14:08

Coimbatore ல் yesterday and today rain drizzling தான். வெயில் இல்லவே இல்லை. Very super climate


Nada Rajan
மே 25, 2025 11:00

கனமழை கொட்டி தீர்க்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை