உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள்; முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி ‛‛போயே போச்சு

சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள்; முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி ‛‛போயே போச்சு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று (நவ.,4) கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.,4) வர்த்தகம் துவங்கியதில் இருந்தே கடுமையான சரிவைக் கண்டன. நாளை நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளுக்கு முன்னதாக முதலீட்டாளர்களின் எச்சரிக்கை தீவிரமடைந்துள்ளதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் காலை 11:53 அளவில் 1,322.40 புள்ளிகள் சரிந்து 78,401.72 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 378.05 புள்ளிகள் சரிந்து 23,926.30 ஆகவும் வர்த்தகமாகின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், சன் பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முக்கிய பங்குகள் பின்னடைவை சந்தித்தன. இருப்பினும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில பங்குகள் லாபத்தை கண்டன.பங்குச்சந்தைகளின் இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கூமூட்டை
நவ 04, 2024 17:12

பங்கு வர்த்தகம் ஏழைகளுக்கு தேவையில்லை. பணக்காரர்கள் சூதாட்டம். இது அரசியல் அமைப்புக்கள் விளையாட்டு விளக்கம் தேவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் செய்தி


Mohan
நவ 04, 2024 16:56

பங்குச்சந்தை வர்த்தகம் உண்மையில் ஒரு சூதாட்டம் போலத்தான். ""செபி""யும் டிஜிடலைசேஷனும் வந்த பிறகு தான் அதன் மீது படிந்த சூதாட்ட கரை சிறிது சிறிதாக மறையத்துவங்கி உள்ளது. அப்படியும் அடிப்படையில் இது சூதாட்டம் தான். ஒரு லிமிடெட் கம்பெனி தனது முதலீட்டிற்காக பங்குகளை மக்களிடம் விற்று பணம் பெறுகிறது. அதற்கு வருடா வருடம் ஈவுத் தொகை தரும். இப்படி நல்ல வர்த்தகம் செய்யும் கம்பெனியின் "பாலன்ஸ் ஷீட்டை" பார்த்து சில ஏஜண்டுகள், இந்த கம்பெனி, சூப்பர் வளர்ச்சி, அதிக லாபம் தரும், அப்படி இப்படின்னு பில்டப் பண்ணுவதால டிமாண்டு அதிகம் ஏற்பட்டு பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாகும். இது போல விலையும் சிலசமயம் குறையும். சரியானபுரிதல் இல்லாதவர்கள் அவற்றை வாங்கியபின் நஷ்டம் அடைவர். தெரிந்தே சுழல் நீரில் குதிப்பது. - அப்புறம் அது இழுத்து தண்ணீரீல் முழுக வைக்கும். சூதாட்டம்னு தெரிஞ்சு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் எப்படி நஷ்டம் என்று அவர்களோ அல்லது அவர்களை சேர்ந்தவங்களோ சொல்றது நியாயமாகும்.?? அதுவும் செய்திபோடற ஊடகங்கள் பெரிய தவறு. எவ்வளவு பங்குகள் எந்த விலையில் வாங்குனாங்களோ தெரியாது. நேற்றைய விலையிலிருந்து இன்றைய விலைக்கு கால்குலேஷன் பண்ணி இவ்வளவு லட்சம் கோடின்னு போட்டு ஏதோ பெரிய ஆபத்துல தேசம் மாட்டின மாதிரி பீலா வுடறது என்ன நியாயம்?. பங்கு வர்த்தகம் பண்ணுறவங்க எல்லாம் இதை நல்லா தெரிஞ்சு தான் பண்றாங்க. ஆக இந்த மாதிரி நஷ்டம்னு பீலா நியூஸ் விடறவங்க எல்லாம் கம்பெனி சம்பள ஆட்களே பங்கு வியாபாரம் பண்றவங்க இந்த லாப நஷ்டம் தெரியாம பண்ற கத்துகுட்டிங்க இல்ல. சும்மா ஏறிச்சு இறங்கிச்சு நியூஸ் போட்டா போதும். லாப நஷ்டம்லாம் செய்யறவன் பாத்துக்கணும். இதுல தடாலடி நியூஸ் தினமலர் போடாம இருந்தா நல்லது.


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 15:38

பங்குச் சந்தை ஒரு பெரிய, புரியாத புதிர். ரூ. 8 லட்சம் கோடி எங்கே போச்சு? யாருக்கு போச்சு? உதாரணமாக 8 கோடிப் பேர் சந்தையில் இயங்குகிறார்கள் என்றால், சராசரியாக ஆளுக்கு ரூ. 1 லட்சம் போச்சா? சரிவைச் சந்தித்த கம்பெனிகள் வழக்கம் போல ஓடிக்கிட்டிருக்கு. எல்லோரும் கம்பெனி க்கும் ஆபீஸ்க்கும் போயிருக்காங்க. ஒண்ணும் புரியல.


Priyan Vadanad
நவ 04, 2024 15:10

எத்தனை கோடி பங்குகள், எத்தனை கோடி மனிதர்களுடையது என்கிற விபரங்களையும் குறிப்பிட்டால்தானே புரியும்?


visu
நவ 04, 2024 14:00

எளிய மக்கள் யாரும் பங்கு வர்த்தகத்தில் இருக்க போவதில்லை பெரும்பாலும் நட்டம் தான் வரும் பெரும் வர்த்தகர்களுக்கு லாபம் கிடைக்கும்


ஆரூர் ரங்
நவ 04, 2024 13:47

ஒவ்வொரு இறக்கமும் அடுத்து வரும் பெரிய ஏற்றத்தின் துவக்கமே. தேர்தல் முடிவுகள் வரும் முன் தரமான பங்குகளை வாங்கி பயனடையலாம். எவ்விதமான சர்வதேச மாற்றமும் நீண்டகால அளவில் பாரத வளர்ச்சிக்கு தடையே இல்லை.


Indian
நவ 04, 2024 15:09

நீர் ஐம்பது லச்சம் ரூபாய்க்கு பங்கு வாங்கி , பங்கு சந்தைக்கு உதவும் .


Duruvesan
நவ 04, 2024 13:19

????


sundarsvpr
நவ 04, 2024 12:59

இந்திய பங்கு சந்தை சரிந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பா என்ற விபரங்களும் செய்தியில் ஏன் வருவதில்லை. எளிய சாதாரண மக்களுக்கு புரியும்படி ஊடகங்கள் ஏன் வெளியிடுதுயில்லை.


R Dhasarathan
நவ 04, 2024 14:42

சரியாக சொன்னீர்கள். தங்கத்தில் இதன் தாக்கம் ஏன் காண்பதில்லை. பங்கு சந்தை வீழ்ச்சி தங்கத்தில் பிரதிபலிக்க வேண்டும், சில வருடங்களாக இது நடப்பதில்லை காரணம் புரியவில்லை. ஏதோ தவறு இருப்பதாக உணர்கிறேன்.


முக்கிய வீடியோ