உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் சட்டத்தை மேற்கோள் காட்டிய 414 பக்க தீர்ப்பு!

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் சட்டத்தை மேற்கோள் காட்டிய 414 பக்க தீர்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், பல்வேறு உலக நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விரிவாக அலசி ஆராய்ந்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 414 பக்கம் கொண்ட தீர்ப்பின் நகல் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்தது, ஜனாதிபதிக்கு அனுப்பிய விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரித்த கோர்ட், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.தமிழக கவர்னர், நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருந்து, ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், கவர்னருக்கு வீட்டோ அதிகாரம் என்று எதுவும் இல்லை என்றும், இரண்டாம் முறை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர, கவர்னருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=96q7qcs7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தீர்ப்பின் முழு விவரமும் தற்போது சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், பல்வேறு சட்ட அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன.மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வரலாற்றுப்பின்னணி என்ற தலைப்பில் சில தகவல்கள் தீர்ப்பில் உள்ளன. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் (1935ம் ஆண்டு) ஒரு பகுதியில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, முன்பு தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.1966ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1971ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ராஜமன்னார் ஆணையம், சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.பார்லி அல்லது சட்டசபையில் நிறைவேறும் சட்ட மசோதாவுக்கு அரசின் தலைவர் ஒப்புதல் அளிப்பது தொடர்பான விவகாரம் சர்வதேச அளவில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது தொடர்பாகவும் நீதிபதிகள் ஆராய்ந்துள்ளனர். அதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலையின் அரசியல் சட்டப்பிரிவு பேராசிரியர் நிக்கோலஸ் பார்பர் கருத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.பிரிட்டனில் மசோதா எவ்வாறு சட்டமாகிறது என்ற நடைமுறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்லி அவைகளில் நிறைவேறிய மசோதா, மன்னரின் ஒப்புதலுக்கு அளிக்கப்படுகிறது. 1707க்கு பிறகு இதுவரை எந்த ஒரு மசோதாவும், பிரிட்டன் மன்னரால், ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதில்லை.கனடா உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பும் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, பிஜி, சாலமன் தீவுகள், பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசியல் சட்டத்தில் இருக்கும் நடைமுறைகளை மேற்கோள் காட்டி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் முதலாவது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தொடர்புடைய நிகழ்வு ஒன்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து நடைமுறை சட்ட மசோதாவில் சிலவற்றை ஏற்காத ராஜேந்திர பிரசாத், அதற்கான ஒப்புதலை அளிக்காமல் நிறுத்தி வைக்க விரும்பினார். அது தொடர்பாக, அப்போதைய அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டார். அட்டர்னி ஜெனரல் செடல்வாட், 'இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதி என்பவர், மந்திரி சபையின் ஆலோசனைப்படி மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மாறாக செயல்பட அவருக்கென்று பிரத்யேக அதிகாரம் என்று எதுவும் கிடையாது' என்று கருத்து தெரிவித்தார். அதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதனால் அப்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதி இடையில் உருவாக இருந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நலன் கருதி, கவர்னரும், மாநில அரசும் ஒன்றுக்கொன்று இணக்கத்துடன் செயல்பட வேண்டும். * எனவே, கவர்னர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு முடிவு எடுக்க வேண்டும்.* ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம்.இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், கவர்னர்களின் முதன்மை செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு முழுவதும் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.https://api.sci.gov.in/supremecourt/2023/45314/45314_2023_11_1501_60770_Judgement_08-Apr-2025.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Nava
ஏப் 13, 2025 10:55

ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் இன்னும் பிறர்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்யும் நீதிபதிகள். கோர்ட்டுகளில் முறையிடப்படும் வழக்குகளுக்கு ஏன் காலம் நிர்ணயிக்க படுவதில்லை மேலும் வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விடயங்களை நீங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பாக கோடை விடுமுறை .உங்களுக்கு கொடுக்கப்படுவது


மீனவ நண்பன்
ஏப் 13, 2025 03:21

அதிக நீதியரசர்கள் கொண்ட அமர்வுக்கு மறுபரீசலனை செய்ய அப்பீல் பண்ண சட்டத்தில் இடம் இருக்கிறதா ?


muthu
ஏப் 13, 2025 01:01

Thanks to all indian governor for not doing anything ie constitutional duty etc and take state salary for getting this sc judgement. Thanks to SC for not stopping governor salary for not doing constitutional duty, may be left with state government preview


DMK
ஏப் 12, 2025 22:15

கதறல் அதிகமாகவே இருக்கு. Supreme கோர்ட் உங்க வீட்டில் வேலை பார்க்கும் ஆள் இல்லை. உங்கள் ஆசைக்கு சொறியவா சட்டம் படித்து அந்த பதவிக்கு வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதோ. உங்களிடம் வந்து டியூஷன் படிக்க வேண்டுமோ


ஆரூர் ரங்
ஏப் 12, 2025 22:15

காவிரி lநீர் வழக்கில் சட்டங்களை ஓரம் கட்டி விட்டு தீர்ப்புக்கு பதிலாக தீர்வு என்ற ஒன்றை அளித்தார்கள். நதிகள் தேசத்தின் சொத்து எந்த மாநிலமும் தன்னுடையது மட்டும் என உரிமை கோர முடியாது என புது விளக்கம் அளித்தார்கள். அது போன்ற தேசநலன் சார்ந்த தீர்ப்புகள் அருகி வருகின்றன. சட்டத்தின் சாராம்சத்தை விட்டு விட்டு சட்ட வாக்கியங்களை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு தீர்ப்பளிக்கப்படுகிறது.


சிட்டுக்குருவி
ஏப் 12, 2025 19:39

இது தீர்க்கப்படாத தீர்ப்பு என்பதில் சந்தேகம் இல்லை.ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் வந்தால் அது மறுபரிசீலனைநிலைக்கு வழிவகுக்கக்கூடாது .நிறுத்தி வைக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன, அவை சார்ந்த சட்டங்கள் என்ன என்ன என்பதை சீராயமலே ஏதோ ஒரு எமோஷனல் படி தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.ஒரு சாதாரண படிக்காத மனிதனின் மனதில் ஏற்படக்கூடிய சந்தேகம் கூட விடையில்லை.ஆளுநர் பதவி நீக்கபடுகின்றது என்று தீர்மானம் இருந்தால்,அதற்கும் ஆளுநர் அங்கீகரிக்க வேண்டுமா? தமிழ் நாடு இன்றிலிருந்து தனி நாடு என்று இருந்தாலும் அங்கீகரிக்கவேண்டுமா? மற்றநாடுகளின் சட்டங்களை ஒப்பிடுவது எப்படி பொருந்தும்.இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நாளையே ஒரு சட்டம் இயற்றி மன்னராட்சி நீக்க்கபடுகின்றது என்று அறிவித்து மன்னருக்கு அனுப்பி ப்பார்தால் மன்னர் அங்கிகரிகின்றாரா என்று தெரியும். அமெரிக்கா சட்டங்களை ஒப்பிடுவது எப்படி பொருந்தும்.அமெரிக்கா கான்ஸ்டிடூயோனே ஒட்டுமொத்தமாக வித்தியாசமானது.அங்கு மத்திய அரசை மாநிலங்கள் சேர்ந்து ஏற்படுத்தியது.மத்திய அரசுக்கு அதிகாரம் மாநிலங்களால் வழங்கப்பட்டது.இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களை ஏற்படுத்தியது.மாநிலங்களுக்கு அதிகாரங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டது.இந்த தீர்ப்பு நீதிக்கு புறம்பான தீர்ப்பு.In the Words of Lord Hewart, Famous Chief Justice of England,"Justice must not only be done but must manifestly and undoubtedly be seen to be done ".இந்த வழக்குல இது நிரூபிக்கப்படவில்லை. ஊடகங்கள் இந்த தீர்ப்பை உலக நாடுகளின் தவறான ஒப்பீடுகலை பார்த்து ஆகாஓஹோ என்று வருநிப்பதற்கு முன்பு சட்டம் பயின்றவர்கலின் கருத்து கேட்டு எழுதினால் நன்றாக இருக்கும்.மக்களுக்கு நன்மை பயக்கும்.இது முற்றிலும் நீதிக்கு புறம்பான தீர்ப்பு என்பதில் எந்த ஐயமும் கிடையாது.உச்சநீதி மன்றம் தானாகமுன்வாந்து மறுபரிசீலனை செய்து நீதியை நிலைநாட்டவேண்டும்.


venugopal s
ஏப் 12, 2025 18:16

உச்ச நீதிமன்றம் இருப்பதால் மட்டுமே மத்திய பாஜக அரசு வாலைச் சுருட்டிக் கொண்டு ஒழுங்காக இருக்கிறது. அவர்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் நமது நாட்டின் கதி என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை!


Tetra
ஏப் 12, 2025 20:35

நினைத்துப்பார்க்க முடியாத அநியாய தீர்ப்பு


அப்புசாமி
ஏப் 12, 2025 17:26

சொந்த சரக்கு ஏதாச்சும் இருக்கா? எல்லாமே ஃபாரின் சரக்குதானா?


Thirumal Kumaresan
ஏப் 12, 2025 16:54

அப்படியென்றால் இந்தியாவில் ஒரு தவறான மசோதாவை சடடசபையில் கொண்டு வந்தால் அது நிறைவேற்றியே ஆக வேண்டுமா, இதற்க்கு போய் அயல் நாட்டு சட்ட்ங்களை ஆராய வேண்டும் என்றால் நமது சட்டங்கள் சரியில்லை என்ட்ராகுமே, உலகுக்கே நியாயம் சொல்லும் நூல்கள் எதற்கு இருக்கிறது. இதை மறு பரிசீலனை செய்யலாம். ஒரு பிரச்சனை யாராவது கொண்டுவந்தால் தான் தவறான சடடங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. நாட்டுக்கு நல்லது செய்யாத சட்ட்ங்களை யாரு களைவது.


Senthil
ஏப் 12, 2025 20:29

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் எந்த சட்டம் கொண்டுவந்தாலூம் அதை மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்த சட்டம் சரியா தவறா என்பதை எல்லாம் மக்கள்தான் தீர்மானம் செய்ய முடியுமே தவிர நியமிக்கப்பட்ட அதிகாரியான ஆளுநர் முடிவு செய்ய முடியாது. அந்த அடிப்படையில்தானே மத்திய பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது, அதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கீறார். பாஜக அரசின் எத்தனையோ சட்டங்களை எதிர்கட்சிகள் தவறான சட்டம் என்று குற்றம் சாட்டுகின்றன, ஆனால் அந்த சட்டங்கள் தவறானது என ஜனாதிபதி நிறுத்தி வைக்கவில்லையே. குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள் தங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கும்போது அந்த சட்டங்களை ரத்து செய்யலாம். அது ஒன்றுதான் வழி.


Ray
ஏப் 13, 2025 07:44

இது பிஜேபியிடம் கேட்கவேண்டிய கேள்வி. ஊன்றுகோல் உதவியுடன் சில சட்டங்களை கொண்டுவந்து ஜனாதிபதி ஒப்புதலை ஓரிரவில் பெறுகிறார்கள். உதாரணம் வக்ப் சட்டம் உச்ச நீதிமன்ற படியேறுகிறதே. பல நடவடிக்கைகள் உச்ச நீதி மன்றத்தால் முடிவெடுக்கப் படுமானால் இந்த அரசாங்கத்தின் நீதி சரியில்லையென்றுதானே பொருள். உலகுக்கே நியாயம் சொல்லும் நூல்கள் எதற்கு இருக்கிறது என்று கேட்டால் ஒரே பதில்தான். அவை ஒன்று கூட இந்தியில் இல்லவேயில்லை என்பதுதான்.


C.SRIRAM
ஏப் 12, 2025 16:37

தீர்ப்பு கொடுத்தவர்களின் பின் புலத்தை ஆராய வேண்டும் . ஏதோ சரியாக இல்லை. அ நீதி எல்லை மீறுவதாக தெரிகிறது .எல்லை மாநில அரசின் சட்டசபை , பிரிவினை வாத தீர்மானம் போட்டு அதை அனுப்பினால் நான்கு மாதத்துக்குள் எப்படி தீர்மானிக்க முடியும் . மற்ற நாடுகளோடு எல்லாவற்றையும் ஒப்பிடவேண்டும் . இவர்களுக்குவேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை