உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் பெண்ணை கொன்று பிரிட்ஜில் வைத்த கொலையாளி ஒடிசாவில் தற்கொலை

பெங்களூருவில் பெண்ணை கொன்று பிரிட்ஜில் வைத்த கொலையாளி ஒடிசாவில் தற்கொலை

பெங்களூரு: பெங்களூருவில் பெண்ணை கொன்று துண்டுதுண்டாக்கி பிரிட்ஜில் வைத்த கொலையாளி ஒடிசாவில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் பூட்டியே கிடந்த வீட்டிலிருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த போலீசார் கடந்த 22-ம் தேதியன்று பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியதில், வீட்டில் பிரிட்ஜிலிருந்தே துர்நாற்றம் வந்தது.பிரிட்ஜை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி.பிரிட்ஜ் உள்ளே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. அது மஹாலட்சுமி, 29 என்பதும் தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், ஷாப்பிங் மால் ஒன்றில் பணியாற்றி வருவதும், திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கணவரிடம் இருந்து பிரிந்து, கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரு வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்துள்ளதும் தெரியவந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்தி ரஞ்சன் ராய் என்பன் தான் கொலையாளியை என கண்டறிந்து அவனை தேடிவந்த நிலையில் ஒடிசாவில் பஹாத்ராக் மாவட்டத்தில் கொலையாளி சடலமாக மீட்கப்பட்டான். அவன் தற்கொலை செய்து கொண்டதாக ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

theruvasagan
செப் 26, 2024 08:46

அறத்துப்பால் மரத்துப் போய் விட்டது. பொருட்பாலும் காமத்துப் பாலுமே தலை தூக்கி நிற்கின்றன. உலக மயமாக்கலின் இன்னொரு முகம் கோரமானது. கொடூரமானது. அதைத்தான் இன்றைய இளைய தலைமுறை பார்த்து கெட்டுச் சீரழிந்து போகிறது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கல்வியும் தொழிலும் நாசத்தில்தான் கொண்டுபோய் விடும்


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 08:12

எல்லாமே கலாச்சார சீரழிவின் வெளிப்பாடு. இப்போது யாருக்கும் சகிப்புத்தன்மை இல்லை. வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை. பணம் செக்ஸ் இது மட்டுமே குறி. இதற்கு நிறைய பேர் பலி ஆகி வருகிறார்கள்.இதற்கு சினிமா சீரியலும் ஒரு காரணம்.


RAMAKRISHNAN NATESAN
செப் 26, 2024 08:01

பெண் கொலையில் தடயவியல் நிபுணர்கள் திணறல் என்று செய்தி வந்த மறுநாளே கொலையாளி ஒடிசாவில் தற்கொலை என்று செய்தி வருகிறது ...... அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட அஷ்ரஃப் என்பவனுக்கு இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு ????


N.Purushothaman
செப் 26, 2024 06:22

இப்போல்லாம் உயிருக்கு மதிப்பே இல்லை ....ஆ ஊ ன்னா பிரிவு, தற்கொலை, கொலை....குலக்கல்வி ன்னு சொல்லி சொல்லியே நீதி போதனை வகுப்புக்களை பள்ளிகளில் தவிர்த்து இன்று சமூகத்தில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்குகிறது ....


Iyer
செப் 26, 2024 06:00

இப்போது அந்த பெண்மணியின் குழந்தையின் கதி என்ன? தாயோ மறுத்துவிட்டாள்.. தந்தையோ பிரிந்துவிட்டான். அவன் இனி அந்த குழந்தையை ஏற்றுக்கொள்வானா?


Iyer
செப் 26, 2024 05:58

"பிரிந்து வாழ்வது" - "விவாஹ ரத்து " போன்றவை இப்போது சஹஜமாகிவிட்டது. மாமிச உணவு, குடி, ஒழுக்கமின்மை, தினமும் யோகா, த்யானம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது - போன்றவை சகிப்புத்தன்மை இல்லாமல் ஆக்கிவிடும். பள்ளி கல்லூரிகளில் யோகா, த்யானம், பிராணாயாமம், உடற் பயிற்சி போன்ற பாடங்கள் கட்டயமாக்கி பரிட்சித்து பின் டிகிரி கொடுக்கவேண்டும்.


Matt P
செப் 26, 2024 04:26

ஆவேசப்பட்டு சிந்திக்காமல் கொலையும் செய்துவிட்டு தன்னையும் கொன்று பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் தவிக்கவிட்டு ...என்ன மண்ணாங்கட்டி வாழ்க்கையோ. ..இதில வேற படிச்சவனுக என்று பிதற்றி கொள்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை