ரவுடிகள் ராஜ்ஜியம்!
ராஜஸ்தானில் எம்.எல்.ஏ., வீட்டிலேயே தொடர்ந்து மூன்று முறை திருட்டு நடந்துள்ளது. மாவட்டங்களிலும், கிராமப்புறங்களிலும் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். போலீசார் தாக்கப்படுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. நாங்கள் உங்களின் எதிரி இல்லை. நடப்பவை குறித்து எச்சரிக்கிறோம்.அசோக் கெலாட்ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்ஹிந்திக்கு எதிரியில்லை!
நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. மராத்தி பேசும் மக்களை, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் சிலர் ஒப்பிடுகின்றனர். நானும், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் மீண்டும் சேர்ந்ததால் இவர்கள் கோபமடைந்துள்ளனர்.உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா, உத்தவ் அணிஅனைத்தும் தேசிய மொழிகளே!
மொழியை வைத்து ஏற்படுத்திய சண்டைகள், மாநிலங்களில் சமூகத்தினரிடையே பிளவை உண்டாக்கியுள்ளது. நம் நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்., நிலைப்பாடு.சுனில் அம்பேத்கர்செய்தி தொடர்பாளர், ஆர்.எஸ்.எஸ்.,