மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
5 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago
குடகு: தாயிடம் இருந்து பிரிந்து, ஊருக்குள் உலா வந்த குட்டி யானை விரட்டியதால், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.குடகின் பொன்னம்பேட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன. நேற்று காலை பொன்னம்பேட் நகருக்குள், குட்டி யானை உலா வந்தது. முதலில் சாதுவாக இருந்த யானை, திடீரென ஆக்ரோஷமாக மாறியது. சாலையில் சென்ற, பொதுமக்களை விரட்டியது. இதனால் அலறி அடித்து ஓடி கடை, வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து, குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி, அதன் கூட்டத்துடன் சேர்த்தனர். தாயிடம் இருந்து பிரிந்து, குட்டி யானை ஊருக்குள் வந்து விட்டதாகவும், மீண்டும் தாயுடன் சேர்ந்து இருப்பதாகவும், வனத்துறையினர் கூறி உள்ளனர். குட்டி யானை ஊருக்குள் புகுந்தது, மக்களை விரட்டியது ஆகிய காட்சிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிஉள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago | 1
5 hour(s) ago
8 hour(s) ago