உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரொட்டி மாவில் ‛உச்சா கலந்து சமைத்து முதலாளியை பழிவாங்கிய வேலைக்காரி

ரொட்டி மாவில் ‛உச்சா கலந்து சமைத்து முதலாளியை பழிவாங்கிய வேலைக்காரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ரொட்டி மாவில் சிறுநீரை கலந்து சமைத்து கொடுத்து பழிவாங்கிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.உ.பி. மாநிலம் காஸியாபாத் நகரைச்சேர்ந்தவர் நிதின் கவுதம், இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் ஷாந்தி நகர் காலனியைச்சேர்ந்த ரீனா 32 என்ற பெண் கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்தும் வந்துள்ளார்.நிதின் கவுதம் குடும்பத்தினருக்கு பல வாரங்களாக உடல் நலக்குறைவு மற்றும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்துள்ளனர். சாப்பிடும் உணவில் ஏதேனும் கலப்படம் இருந்திருக்கலாம் என மருத்துவர் கூறவே.உணவு சமைத்து தரும் வேலைக்காரி ரீனா மீது நிதின் கவுதம் மனைவி ரூபம் கவுதமிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க சமையலறையில் சிசிடிவி. வைத்தார் ரூபம் கவுதம் . சம்பவத்தன்று வேலைக்காரி ரீனாவின் நடவடிக்கையை சிசிடிவி.யில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.வேலைக்காரி ரீனா காலை உணவிற்காக ரொட்டி மாவு பிசைய தண்ணீருக்கு பதிலாக தன் சிறுநீரை ரொட்டி மாவில் கலந்து பிசைந்து கொண்டிருந்தது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதனை கண்டு அதிர்ந்து போன ரூபா கவுதம் போலீசில் புகார் கூறினார். போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரீனாவை கைது செய்தனர். விசாரணையில் தன்னை அடிக்கடி முதலாளி திட்டியதால் அவரை பழிவாங்கவே ரொட்டி மாவில் சிறுநீரை கலந்ததாக தெரிவித்தார். அவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்கி்ன்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Tetra
அக் 22, 2024 13:48

விஜயின் அம்மா சேசு பாடல் பாடினாரா,இல்ல ராமர் பாடல் பாடினாரா? தெலியலேது ராமா


Ramesh Kumar
அக் 18, 2024 22:57

Worst lady punishment is very essential for her


mohamed salim Abdullahhussaini
அக் 18, 2024 14:59

பெரிய ஆளுகளை எதிர்க்க முடியாத சாமானிய மக்களின்செயல் இப்படித்தான் இருக்கும்


Shekar
அக் 19, 2024 09:22

இது சுத்த பைத்தியக்காரத்தனம். பிடிக்கலையினா வேலையை விட்டிட்டு போயிருக்கணும். இப்போ 2 வருஷம் உள்ளே போடுவானுக, அடுத்து இவளுக்கு யார் வேலை கொடுப்பார்?


SHARVADEV TOURS AND TRAVELS
அக் 18, 2024 13:53

Good


பேசும் தமிழன்
அக் 17, 2024 07:46

மைனர் குற்றவாளிகள் புகைப்படத்தை தானே வெளியிட தடை.... இங்கே மேஜர் குற்றவாளியின் படம் எதற்க்காக மறைக்கப் பட்டுள்ளது..... இதே போல ஒரு ஆண் குற்றம் செய்து இருந்தால் இப்படி தான் முகத்தை மூடியபடி படம் வெளியிடுவீர்களா ??? ஆண்களுக்கு ஒரு நியாயம்..... எங்களுக்கு ஒரு நியாயமா ???


Dharmavaan
அக் 17, 2024 07:20

இதற்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 07:12

சாப்பிடும்போது துர்நாற்றம் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம் ...........


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 07:10

Reena name meaning is Gem pearls and the associated lucky number is 9.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 17, 2024 09:38

புத்திபேதளிச்சால் மட்டுமே இப்படி ஒரு கோணங்கி பதிவிட முடியும் நடேசா .


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 17, 2024 05:54

வீடுகளில் சமையல் வேலைக்கு அன்னியரை வைத்து கொள்ளாதீர்கள். சமையல் என்பது மிகவும் முக்கியம். சமைப்பவர் எண்ணங்கள் சமைப்பவருடைய மனதின் ஓட்டம் சாப்பிடும் உணவு மூலமாக சாப்பிடுவோருக்கு சென்றடையும் என்று நமது இந்து ஆன்மீகம் கூறுகிறது. நமது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும். பள்ளி கல்லூரி சென்று நன்கு படிக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் நமது கணவர் மனைவி மகள் மகன் நன்கு பணிபுரிந்து நல்ல பெயர் எடுக்க வேண்டும். இறைவா அதற்கு நீ கருணை காட்டு இந்த உணவு சாப்பிடும் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இது போன்ற நல்ல எண்ணங்களுடன் கடவுள் பாடல்களை மனதிற்குள் பாடிக் கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு சமையல் செய்ய வேண்டும். வேலைக்காரர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. வெளியே ஹோட்டல்களிலும் இதனை எதிர்பார்க்க முடியாது. இதற்கு நல்ல உதாரணம் சமீபத்தில் நடிகர் விஜய் அவர்களின் தந்தையார் ஒரு பேட்டியின் போது விஜய் அவர்களின் அம்மா நன்கு பாடுவார். நடிகர் விஜய் அவர்கள் கருவில் இருக்கும் போது அவருடைய அம்மாவின் பாடல்கள் கேட்டதால் நடிகர் விஜய் நன்கு பாடுவார் என கூறினார்.


Mahadevan Ramanan
அக் 18, 2024 09:53

இது தான் பித்தலாட்டம் என்பது. விஜய் நடிகனை அபிமன்யு வுக்கு ஒப்பிடுவது சரி இல்லை.


Kasimani Baskaran
அக் 17, 2024 05:37

வேங்கை வயல் அளவுக்கு போகவில்லை என்பது ஒரு ஆறுதல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை