உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செனாப் ரயில் பாலத்தின் அற்புதம்: 17 ஆண்டாக செதுக்கிய பேராசிரியை

செனாப் ரயில் பாலத்தின் அற்புதம்: 17 ஆண்டாக செதுக்கிய பேராசிரியை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தெரிய வந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.உலகின் மிக உயரமான இந்த பாலம், 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. உதம்பூர்- - ஸ்ரீநகர்- - பாரமுல்லா ரயில் இணைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் உள்ளது.

திட்ட வடிவமைப்பு

செனாப் ரயில் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்திற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர், பேராசிரியை மாதவி லதா. பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான இவர், செனாப் ரயில் பால திட்டத்தில், புவி தொழில்நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். பாலத்தின் ஒப்பந்ததாரரான, 'ஆப்கான்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், நிலப்பரப்பால் ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்டு கட்டமைப்பின் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டார்.

பாறைகளின் தன்மை

செனாப் ரயில் பாலத்தை கட்டுவதற்கு சவாலான நிலப்பரப்பு, வானிலை, தொலைதுார இருப்பிடம் ஆகியவை சவாலாக இருந்தன. ஆனால், பேராசிரியை மாதவி லதா தலைமையிலான குழுவினர், அனைத்து தடைகளையும் கடக்க சிறந்த அணுகுமுறைகளை தயாராக வைத்திருந்தனர். அயராது உழைத்த இந்த குழுவினர், பாறைகளின் தன்மைகள், வழித்தடங்களை கண்டறிந்தனர்.

யார் இந்த மாதவி லதா?

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியையான மாதவி லதா, 1992ல், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்., பட்டம் பெற்றார். 2000ல், ஐ.ஐ.டி., -சென்னையில் புவி தொழில்நுட்ப பொறியியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு, 2021ல், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது. 2022ல், இந்தியாவின் ஸ்டீம் நிறுவனத்தில், சிறந்த 75 பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mahalingam
ஜூன் 09, 2025 08:41

இருக்கும்போது செய்யவில்லை இன்னொருவர் செய்தாலும் அதற்க்கு குறை கூறும் வயிற்று burning மனிதர்கள்


fitz gerard rayen
ஜூன் 08, 2025 21:31

They praised about Geotechnical Enginner..Geotechnical Engineer alone cannot complete the design.Other Lead engineers who involved in this project must be appreciated.


mohammed
ஜூன் 08, 2025 20:46

காங்கிரஸ் ஆட்சியில் ஒன்னுமே செய்யவில்லை என்று சொல்லும் பிரதமர் , அவர்கள் தொடங்கி வைத்த திட்டத்தை முடித்து வைத்து உள்ளார் என்று சொல்ல மனம் இல்லையோ


Dharmavaan
ஜூன் 11, 2025 08:45

தொடங்குகிறேன் என்று சொல்லி ஒரு செங்கல்லை வைத்து விட்டு மறந்து விட்டால் செய்தது ஆகாது .விளையாட்டில் கோல் போடுபவனுக்குத்தான் மதிப்பு


spr
ஜூன் 08, 2025 18:18

பாராட்டுவோம் வாய்ப்பு கிடைத்தால், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் காட்டுகிறார்கள். பிற பங்கேற்பாளர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கலாமே


ஈரோடுசிவா
ஜூன் 08, 2025 12:18

, வாழ்க வளமுடன்...


P.Chandrasekaran
ஜூன் 08, 2025 11:09

நல்வாழ்க்கள். இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளார்.


V.Mohan
ஜூன் 08, 2025 08:08

இந்தியாவின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெண்களை இந்திய ஆண்கள் பெரிதும் பாராட்டவில்லை என்றாலும், அவர்களுக்கு எதிரான, பாலியல் கொடுமை உட்பட பலவிதமான முன்னேற்றத்தடைகளை ஏற்படுத்துவது அசிங்கத்திலும் அசிங்கம் என்பதை ஆண்கள் உணராமலேயே இருப்பதுதான் மிகப் பெரும் கொடுமை. சே 2025 லுமா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை