உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 கோள்களும் காட்சி தரும் அதிசய வானியல் நிகழ்வு : பிப்.28ல் கண்டு ரசிக்கலாம்

7 கோள்களும் காட்சி தரும் அதிசய வானியல் நிகழ்வு : பிப்.28ல் கண்டு ரசிக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் பிப்.28 இரவு வானில் ஒரு அற்புதமாக 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது.மகா கும்பமேளா 2025, கடந்த ஜன.13ல் தொடங்கி பிப்.26 மகா சிவராத்திரியோடு நிறைவடைகிறது.இதையொட்டி வானத்தில் ஒரு அரிய வானியல் நிகழ்வு நடக்கிறது.பிப்ரவரி 28ம் தேதி, இரவு வானில் ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.இவற்றில், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து கொள்கிறது. இதன் மூலம் சூரிய குடும்பத்தின் ஏழு கிரகங்களை ஒரே இரவில் பார்க்க முடியும். இவற்றில் ஐந்து கிரகங்களை வெறும் கண்களால் மட்டுமே பார்க்க முடியும்; யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கிரகங்களை மட்டும் பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் உதவியுடன் பார்க்கலாம்.இதுபோன்ற அண்ட நிகழ்வுகள் ஆன்மிக ஆற்றல்களைப் பெருக்குவதாக நம்பிக்கை உள்ளது.இந்த அரிய வானியல் நிகழ்வு பற்றி அறிவியலாளர்கள் கூறியதாவது: தற்போது மட்டுமின்றி, ஆகஸ்ட் 2025 நடுப் பகுதியிலும் ஆறு கிரகங்கள் தெரியும் இதேபோன்ற காட்சியைக் காண முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
பிப் 21, 2025 01:06

இதெல்லாம் வேஸ்ட்டு. ஏழு என்ன? ஒன்பது கோளையும் ஒண்ணா பாக்க நீங்க பிள்ளையார்பட்டிக்கு போங்க. "ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்", டட டட, டட டட, டட டட் டய்ங். ..இந்துக்களே ஒண்ணாப்படுங்க.. பிள்ளையார்பட்டிக்கி போங்க.


THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
பிப் 20, 2025 22:57

வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புதன் ஆகிய ஏழு கோள்களையும் காண பிப்ரவரி 28-ந்தேதியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


Priyan Vadanad
பிப் 20, 2025 21:43

இது இண்டியா கூட்டணி மாதிரி. பெப்ரவரி 28 ல் நேராக நிற்பது அடுத்த நாளே நீயா நானா என்று விலகி போய்விடும்.