UPDATED : ஜூலை 22, 2025 03:26 PM |  ADDED : ஜூலை 22, 2025 11:30 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி அவசர கதியில் தரையிறக்கப்பட்ட பிரிட்டீஷ் கடற்படைக்குச் சொந்தமான எப் 35 பி விமானம், பழுது நீக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 22) தாயகம் திரும்பிச் சென்றது.பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான, 'எப் - 35' பி ஜெட் விமானம், கடந்த மாதம் 14ல், அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது, எரிபொருள் பற்றாக்குறையால் அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. https://www.youtube.com/embed/Xho9TpkOm1Eஇந்திய  அரசு சார்பில் எரிபொருள் வழங்கிய நிலையிலும், அந்த விமானம் பறக்க முடியவில்லை. பழுதாகி நின்று விட்டது.  அந்தநாட்டு பொறியாளர்கள் எவ்வளவோ முயன்று போராடியும் பழுது நீக்க முடியவில்லை. இதனால் விமானம், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்தது.உலகின் விலை உயர்ந்த விமானம் இப்படி பழுதாகி நிற்பது குறித்து, இணையத்தில் நெட்டிசன்கள் கேலி கிண்டல் விமர்சனம் செய்தனர்.  பழுது நீக்க முடியவில்லை என்றால், எப்படி கொண்டு செல்வது, சரக்கு விமானத்தில் துாக்கிச்செல்வதா இல்லை ஒவ்வொரு பாகமாக கழற்றி கொண்டு செல்வதா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.எதற்கும் கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று கருதி, பிரிட்டனில் இருந்து தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட விமானப்படை பொறியாளர்கள் 24 பேர்,  கடும் முயற்சி எடுத்தனர்.அதன் பயனாக பழுது நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த விமானம் இன்று (ஜூலை 22) தாயகம் திரும்பிச் சென்றது. இந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து தாயகம் புறப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பிரிட்டீஷ் அரசு!இது தொடர்பாக, பிரிட்டீஷ் பாதுகாப்புத் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு, பிரிட்டீஷ் F-35B விமானம் இன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. இந்திய அதிகாரிகளின் அனைத்து ஆதரவிற்கும்,  நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.