உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பனாமாவில் ஹோட்டலில் இந்தியர்கள்: பாதுகாப்பாக இருப்பதாக துாதரகம் உறுதி

பனாமாவில் ஹோட்டலில் இந்தியர்கள்: பாதுகாப்பாக இருப்பதாக துாதரகம் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக பனாமாவுக்கான இந்திய துாதரகம் உறுதிபடுத்தியுள்ளது. தங்கள் நாட்டின் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வரும் அமெரிக்கா, இப்போது புதிய வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளது. முதலில் அவரவர் நாட்டுக்கே நேரடியாக ராணுவ விமானங்களில் கொண்டு சென்று இறக்கி விட்ட அமெரிக்கா, அப்போது பனாமா நாட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறது.அங்கிருந்து அவர்களை, அவரவர் சொந்த நாட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பனாமா நாட்டின் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர், ஹோட்டல் ஜன்னல் வழியாக உதவி கோரிய வீடியோ வெளியாகிய நிலையில் இந்திய துாதரகம் விளக்கம் அளித்துள்ளது.இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'நாடு கடத்தப்பட்டவர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளனர். அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசுடன் பணியாற்றி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajakumar
பிப் 21, 2025 06:45

என்னத்த சொன்னாலும் செவிடங்காதுல ஊதுர சங்கு மாதுரி, பயனேதும் இல்லா


ப்ரானேஷ்படேல்
பிப் 21, 2025 06:20

இந்த விஷயத்தில் அமெரிக்காவை நம்பலாம்.


Anu Sekhar
பிப் 20, 2025 21:27

இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட பரிதாப படாதீர்கள். யாரும் இவங்களை சட்டத்துக்கு எதிராக இங்கே அழைக்கவில்லை. இந்தியா இவர்களுக்காக ஒன்றும் பரிந்து பேச முடியாது. ஒரு நாடு சட்ட விரோதமான நடவடிக்கைளை ஊக்குவிக்க முடியாது. செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கவும். இது போல செயல்களில் இனி ஈடுபடுபவர்களுக்கு நல்ல பாடம்


Rajakumar
பிப் 21, 2025 06:38

இந்தியாவுக்கு வெளிநாட்லேருந்து கஷ்டபட்டு அவங்க சம்பாரித்து கொடுத்த காச வாங்கரீங்க.....,


Ramesh Sargam
பிப் 20, 2025 21:21

பனாமாவில் ஹோட்டலில் உள்ள தமிழர்களை காப்பாற்றவேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் இப்பொழுது கடிதம் எழுதுவார் பாருங்களேன். முதலில் அங்கு தமிழர்கள் உள்ளனரா என்பதே அவருக்கு தெரியாது.


venugopal s
பிப் 21, 2025 13:16

எல்லோரும் உங்கள் குஜராத், பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான், தமிழர்கள் அல்ல!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை