உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை

ஹிந்துவாக இருந்ததால் நேபாள நபரும் தப்பவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பஹல்காம்: காஷ்மீர் பஹல்காமில், 26 பேர் பயங்கவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒரு வெளிநாட்டரும் இறந்துள்ளார். அவர் நமது அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த, 27 வயது இளைஞர் சுதீப் நியூபனே. இவர் பொதுசுகாதார கல்வி பயன்றவர். சமூக சேவை பணிகளில் ஈடுபாடு கொண்டவர். விடுமுறையை கழிக்க, தனது தாய் ரிமா மற்றும் சகோதரியுடன் பஹல்காம் வந்துள்ளார். அவர் வெளிநாட்டவராக இருந்தும், ஹிந்து என தெரிந்ததால், பயங்கரவாதிகள் ஈவிரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.கொல்லப்படுவதற்கு முன், உன் பெயர் என்ன என, பயங்கரவாதிகள் கேட்டுள்ளனர். 'சுதீப்' என கூறியதும், 'மதம் பிடித்த' பயங்கரவாதிகள் தலையில் குறிவைத்து சுட்டுள்ளனர் என, அவரது தாத்தா சோகத்துடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivasankaran Kannan
ஏப் 25, 2025 09:55

என்ன சொல்ல வரீங்க.. தீவிரவாதிகள் எல்லாம் நல்லவங்க என்றா?


Padmasridharan
ஏப் 25, 2025 08:52

பெயரை வைத்தே, மதத்தை கண்டுபிடித்து, தன் போன்ற பிற மனிதர்களை கொன்றவர்கள் மொழியை வைத்து பள்ளிக் குழந்தைகளை சொந்த மாநில மொழியிடமிருந்து வேறுபடுத்த நினைக்கின்ற மாதிரி செயல்பட்டிருக்கிறார்கள். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் மொழி ஒன்றை மறந்துவிட்டு மொழிச் சண்டை போடும் அரசியல்வாதிகளும் இவ்வாரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை