மேலும் செய்திகள்
உடல் வலியா...? எலுமிச்சை இஞ்சி ரசம் குடிங்க!
07-Sep-2024
மழைக்காலத்தில் மீதமாகும் பழைய சாதத்தை சாப்பிட பிடிக்காது. அதற்காக அதை குப்பையில் கொட்டவும், இல்லத்தரசிகளுக்கு மனம் வராது. பழைய சாதத்தை பயன்படுத்தி சுவையான 'தாலிபட்டு' என்ற சிற்றுண்டியை தயாரிக்கலாம்.செய்முறை:முதலில் மீதமுள்ள சாதத்தை மிக்சியில் போடுங்கள். அதில் பூண்டு, கொத்துமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா தழைகளை போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.ஒரு அகலமான பாத்திரத்தில், அரைத்து வைத்த பொருட்களை போட வேண்டும். அதில் கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு, சுவைக்கு தகுந்தபடி உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் போட்டு சப்பாத்தி பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.அதன்பின் இந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போன்று தட்ட வேண்டும். இதை தோசைக்கல்லில் போட்டு தேவையான அளவில், எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும், பொன்னிறமாக வேக வைக்க வேண்டும். சப்பாத்தி போன்று தட்டுவதற்கு பதிலாக, மாவு கலவையை வடைகளாக தட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொறித்து எடுக்கலாம். சூடான, சுவையான 'தாலிபட்டு' ரெடி. தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ், சில்லி சாஸ் பொருத்தமாக இருக்கும்.இனி சாதம் மீந்துவிட்டால், கவலையே வேண்டாம். 'தாலிபட்டு' செய்து சாப்பிடலாம்.தேவையான பொருட்கள் கோதுமை மாவு - ஒரு கப் சோள மாவு - ஒரு கப் கடலை மாவு - ஒரு கப் வெள்ளை பூண்டு - ஐந்தாறு பற்கள் கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பச்சை மிளகாய் - இரண்டு இஞ்சி - சிறு துண்டு புதினா - கைப்பிடி அளவு - நமது நிருபர் -
07-Sep-2024