உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சியே தோற்று போயிடுச்சு.. ஆட்டம் பாட்டம் தேவையா? டில்லி முன்னாள் முதல்வருக்கு எதிர்ப்பு

கட்சியே தோற்று போயிடுச்சு.. ஆட்டம் பாட்டம் தேவையா? டில்லி முன்னாள் முதல்வருக்கு எதிர்ப்பு

புதுடில்லி: டில்லியில் ஆம்ஆத்மி தோல்வியை தழுவிய நிலையில், முதல்வர் அதிஷி நடனமாடி கொண்டாடுவது அவசியமா?என அக்கட்சியின் அதிருப்தி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளது. டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். கல்கஜி தொகுதியில் போட்டியிட்ட முதல்வராக இருந்த அதிஷி வெற்றி இருந்தார். ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், 22 சீட்களில் மட்டுமே ஆம்ஆத்மி வெற்றி பெற்றது. கட்சி தோல்வியை சந்தித்து இருந்தாலும், தான் வெற்றி பெற்றதை அதிஷி தன்னுடைய ஆதரவாளர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். தன்னுடைய தொகுதியில் ரோட் ஷோ நடத்தியதுடன், நடனமாடியும் மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில், தேர்தலில் கட்சியும், கட்சியின் மூத்த தலைவர்களும் தோல்வியடைந்த நிலையில், அதிஷிக்கு இந்த ஆட்டம் தேவையா? என்று ஆம்ஆத்மியின் அதிருப்தி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அதிஷி இதற்கு வெட்கப்பட வேண்டும். அவருடைய கட்சி கடும் தோல்வியை சந்தித்துள்ளது. கட்சியின் சீனியர்கள் தோற்று விட்டார்கள். இந்த சூழலில், அதிஷி அவருடைய வெற்றியை ரோட் ஷோ நடத்தி, நடனமாடி கொண்டாட வேண்டுமா? அவரது கட்சி தோல்வியடைந்த பிறகு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ஏன்?யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜன் லோக்பாலை மீண்டும் கொண்டு வர வேண்டும். சி.ஏ.ஜி., அறிக்கை தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடத்தி, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
பிப் 10, 2025 18:53

அவருடைய வெற்றியை ரோட் ஷோ நடத்தி, நடனமாடி கொண்டாட வேண்டுமா? அவரது கட்சி தோல்வியடைந்த பிறகு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என்றால் தெருக்களில் இனி துடைப்பம் இருக்காது என்ற குதூகலத்தில் அதிஷி அவர்களே நடனமாடி இருக்கலாமே யாருமே துடைப்பத்தை கரையிலேந்தி அருகில் அடிப்பதற்கல்ல - வரமாட்டார்கள் என்ற சந்தோஷம்தான்


சமீபத்திய செய்தி