உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு வாக்காளர் பட்டியல் கொடுத்தவர் திடீர் பல்டி

ராகுலுக்கு வாக்காளர் பட்டியல் கொடுத்தவர் திடீர் பல்டி

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பான தரவுகளை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு வழங்கிய தேர்தல் ஆய்வாளர், அதில் பிழை இருப்பதாக திடீரென பல்டி அடித்துள்ளார். புள்ளி விபரத்தில் ஏற்பட்ட அந்த பிழைக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் . இதையடுத்து, 'பிழையான தரவுகளை வைத்து தேர்தல் கமிஷன் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டிய ராகுல், மன்னிப்பு கோர வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியான மகாதேவபுரா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மேலும், மஹாராஷ்டிராவில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலிலும் இந்த மோசடி நிகழ்ந்திருப்பதாக கூறினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்காக, ராகுல் புகார்களை கூறியிருந்தார். மேலும், இதற்கு ஆதாரமாக சி.எஸ்.டி.எஸ்., எனப்படும், வளர்ந்து வரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையத்தின் தலைவரான, தேர்தல் ஆய்வாளர் சஞ்சய்குமார் வெளியிட்டிருந்த புள்ளி விபரங்களையும் ராகுல் சுட்டிக்காட்டியிருந்தார். சி.எஸ்.டி.எஸ்., வெளியிட்டிருந்த அந்த புள்ளி விபரங்களில் மஹாராஷ்டிராவில் பல்வேறு சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தும், திடீரென சரிந்தும் காணப்படுகிறது என கூறப்பட்டிருந்தது. இதைவைத்து ஓட்டு திருட்டு நடந்திருப்பதாக கூறிய ராகுல், இதற்கு தேர்தல் கமிஷனும் உடந்தையாக செயல்படுவதாக விமர்சித்தார். அத்துடன், 'ஒரு வாக்காளர், ஒரு ஓட்டு' என்ற முழக்கத்தை முன்வைத்து பீஹாரில் எதிர்ப்பு பேரணி நடத்தி வருகிறார். இந்நிலையில், திடீர் திருப்பமாக அந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் பிழையானவை என, தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிழையான புள்ளி விபரங்களை வெளியிட் டதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மஹாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2024ல் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தரவுகளை ஒன்றாக வைத்து ஒப்பிடும்போது பிழை ஏற்பட்டு விட்டது. எங்களது ஆய்வு குழு, ஒரு வரிசையில் இருந்த தரவுகளை பிழையாக படித்து கணக்கிட்டு விட்டனர். தவறு என தெரிந்ததும், உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டேன். தவறான புள்ளி விபரங்கள் வெளியிட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். புள்ளி விபரங்களில் பிழை ஏற்பட்டிருப்பதை சஞ்சய் குமார் ஒப்புக் கொண்டதை அடுத்து, காங்கிரசுக்கு எதிராக பா.ஜ., வலுவாக பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவருமான அமித் மாள்வியா கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது பொய்யானவை என நிரூபணமாகி விட்டது. தேர்தல் கமிஷனை அப்பட்டமாக குறிவைத்து குற்றஞ்சாட்டிய போக்கு ராகுலையும், காங்கிரஸ் கட்சியையும் எங்கே நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை. தகுதி வாய்ந்த வாக்காளர்களை கூட போலியானவர்கள் என கூறும் அளவுக்கு பொய்யான புள்ளிவிபரங்களை நம்பி ராகுல் குற்றஞ்சாட்டிவிட்டார். இது மிகவும் வெட்கக்கேடானது. இதற்காக ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நாடு முழுதும் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக ராகுல் சுமத்திய குற்றச்சாட்டுகளை எல்லாம் தேர்தல் கமிஷனும் மறுத்து வந்தது. வாய்மொழியாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை பிரமாண பத்திரத்தில் எழுதி ராகுல் தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கோர வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. தற்போது தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமாரின் தரவுகளும் தவறானவை என தெரியவந்திருப்பதால், காங்கிரஸ் பொய் மூட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலை என பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. ரபேல் முதல் சிந்துார் ஆப்பரேஷன் நடவடிக்கை வரை அனைத்து விவகாரங்களிலும் காங்கிரஸ் பொய்களையே பேசி வருகிறது என தெரிவித்துள்ளது.

சர்ச்சை ஏற்படுத்திய சஞ்சய்குமார்

மஹாராஷ்டிரா தேர்தல் குறித்து தேர்தல் ஆய்வாளரான சஞ்சய் குமார் தன் சமூக வலைதளத்தில் சில தரவுகளை பதிவிட்டிருந்தார். அதில் பிழை இருப்பது தெரிய வந்ததும், தற்போது அதை நீக்கியுள்ளார். முன்னதாக அவர் பதிவிட்டிருந்த தகவல் இது தான்: தொகுதி எண் 59, ராம்டெக் 2024ல் மொத்த வாக்காளர்கள் லோக்சபா - 4,66,203 சட்டசபை - 2,86,931 குறைந்த வாக்காளர்கள் 1,79,272 (-38.45%) தொகுதி எண் 126, தேவ்லாலி 2024ல் மொத்த வாக்காளர்கள் லோக்சபா - 4,56,072 சட்டசபை - 2,88,141 குறைந்த வாக்காளர்கள் 1,67,931 (-36.82%)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

Ganapathy
ஆக 22, 2025 22:37

அசிங்கப்பட்டான் அம்மாஞ்சி பப்பூ..


Selvaraj K
ஆக 22, 2025 22:25

தேர்தல் ஆய்வாளர் பல்டி அடிக்க காரணம் மிரட்டப்பட்டு இருக்கிறார்


Mahendran Puru
ஆக 21, 2025 14:21

இதெல்லாம் நடக்குமென எதிர் பார்த்ததுதானே. பாஜகவா கொம்பா.


Bala Sethuram
ஆக 21, 2025 09:19

பயம் காட்டி , அஜித்குமார் போல அடித்து உதைத்து பணிய வைக்க உலகெங்கும் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்ற எண்ணமோ ?


முருகன்
ஆக 20, 2025 22:49

தீடிர் பல்டி அடித்து உள்ளார் அவருக்கு அவருடைய கவலை


மனிதன்
ஆக 20, 2025 21:13

ஆட்சி,அதிகாரம் இருக்கிறதென்று ஆட்டம் போடாதீர்கள்... மிரட்டி பணிய வைப்பதொன்றும் நமக்கு புதியதல்லவே... காலம் மாறும், காட்சிகள் மாறும்...


Ganapathy
ஆக 23, 2025 23:45

"மூர்க" மனித கூட்டத்தின் தலைவன் இவன்.


M Ramachandran
ஆக 20, 2025 20:38

திரி சங்கு சொர்க்கம் என்பது இது தானோ ராகுலு.அந்தச்சொற்கதியய் தான் உங்க அமெரிக்கா நண்பர் டிரம்ப் எதிர் பார்க்கிறார். அவரைய இந்தியாவிற்கு வர வழைத்து உங்க INDI கூட்டணியில் சேர்த்து கொண்டால் போதும் அவருக்கு புரிந்து விடும் அப்புறம் அவர் மெண்டல் ஆஸ்பத்திரி தேடி ஓடவேண்டியதிருக்கும். அவருக்கும் வழி காட்டின மாதிரியிருக்கும் உங்களுக்கு பாராளுமன்றத்தில்நீங்க செய்யும் கூத்து அனுபவித்த மாதிரியும் இருக்கும்.


Santhakumar Srinivasalu
ஆக 20, 2025 18:53

தகுதியான வாக்காளர்களை எல்லாம் போலியானவர்கள் என்று பேசிய இந்த இரட்டை குடியுரிமை பப்பு யார் யாரிடம் எல்லாம் சத்திய பிரமாணம் சமர்பிப்பு மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க போகிறார்?


பேசும் தமிழன்
ஆக 20, 2025 18:29

என்னய்யா பப்பு....நீ எங்கே கால் வைத்தாலும் புட்டுக்கும் போல... அந்தளவுக்கு ராசியான ஆள்.... என்ன தான் போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு வந்தாலும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.... அவர்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது..... ஓட்டுக்காக..... கான் எப்படி காந்தியாக மாறினார் என்ற உண்மை தெரிந்து விட்டது.... உங்கள் வேடம் கலைந்து விட்டது.


kannan
ஆக 20, 2025 18:23

நம் பார்த்த தேசத்தின் மீது கொஞ்சம் கூட பற்று இல்லாமல் அந்நியன் போல நடக்கும் ராவுல் விஞ்சியின் கான்கிராஸ் அஸ்தமனத்தில் உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை