உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்கை ஈர்க்கிறது!

கொள்கை ஈர்க்கிறது!

ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் அடுத்த ஆண்டு நுாற்றாண்டை நிறைவு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளால் நாடு முழுதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இந்த ஜூன் வரை 66,529 பேர் புதிதாக இணைந்துள்ளனர். சுனில் அம்பேத்கர், செய்தித் தொடர்பாளர், ஆர்.எஸ்.எஸ்.,

வலதுசாரிகளுக்கு ஆபத்து!

தற்போது உலகெங்கிலும் உள்ள வலதுசாரி தலைவர்கள், தீவிர இடதுசாரிகளின் இலக்குகளாக உள்ளனர். அதற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்பும் தப்பவில்லை. இருப்பினும், இது போன்ற தாக்குதல்களால் தேசமே பிரதானம் என்ற சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியாது. ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

வரியால் மக்களுக்கு சுமை!

கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை 3.65 லட்சம் கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் தனிநபர்கள் செலுத்திய வரியின் பங்கு, 21 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிறுவனங்களின் வரி பங்கு, 35 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக குறைந்துஉள்ளது. இதனால் நடுத்தர மக்களுக்கு சுமை கூடியுள்ளது.ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ