உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொம்மை முதல்வருக்கு இதுதான் தெரியும்; டில்லி முதல்வருக்கு பா.ஜ., பதிலடி

பொம்மை முதல்வருக்கு இதுதான் தெரியும்; டில்லி முதல்வருக்கு பா.ஜ., பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பள்ளி வெடிகுண்டு சம்பவம் குறித்து டில்லி முதல்வர் அதிஷி மத்திய அரசை விமர்சித்ததற்கு, பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.டில்லி, ரோகினி மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில், சி.ஆர்.பி.எப்., பப்ளிக் பள்ளி அருகே இன்று (அக்., 20) காலை 7.47 மணிக்கு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி திறப்பிற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதால், எந்த உயிர்ச்சேதமோ, காயமே ஏற்படவில்லை. ஆனால், சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்தும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும், கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்தன.பள்ளியில் அரங்கேறிய இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக டில்லி போலீஸின் சிறப்பு பிரிவு, என்.ஐ.ஏ., சி.ஆர்.பி.எப்., மற்றும் என்.எஸ்.ஜி., உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள மத்திய பா.ஜ., அரசு தான் பொறுப்பு என்று டில்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டினார். ஆனால், மத்திய பா.ஜ., அரசு இதனை மறுப்பதாகவும், இதனை பயன்படுத்தி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், டில்லி மக்களின் சுகாதாரத்துறை, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்டவை தப்பித் தவறி மத்திய பா.ஜ., அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றால், இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும் என்றும் டில்லி முதல்வர் அதிஷி விமர்சித்தார். டில்லி முதல்வரின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., நிர்வாகி ஷாஷியா இல்மி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, 'பொம்மை முதல்வருக்கு இதுதான் தெரியும். ஏதாவது தலைப்பு பற்றி பேசுங்கள் என்று சொன்னாலே, அவர் மத்திய அரசை பற்றி மட்டும் தான் பேசுவார். மிகவும் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதனையை வெளிப்படுத்தாமல், அரசியல் ஆதாயம் தேடுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். முதல்வர் அதிஷியின் இந்தப் பேச்சு, அரசியல் பக்குவமில்லாததை காட்டுகிறது,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 23:36

டெல்லி முதல்வர் அறிவு பூர்வமாக சிறப்பான கேள்வி தான் கேட்டிருக்கிறார். டெல்லி போலீஸ் அமித்ஷா வின் துறை யின் கீழ் தான் இயங்குகிறது. உளவுத்துறையும், NIA வும் அமித்ஷா கீழ இருக்கும் துறையில் தான் இயங்குகின்றன. ஒன்றிய அரசு தான் பொறுப்பு.


Sudha
அக் 20, 2024 19:49

இந்த மாதிரி பேச பிஜேபி மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது, பீஹார் கள்ள சாராய சாவுகள் அக்கட்சிக்கு உறைக்காது...


ganapathy
அக் 20, 2024 20:19

தமிழக கள்ளச்சாராய சாவுகள்,வேங்கைவயல் சம்பவம், திராவிட மட சாம்பிராணிகளுக்கு கண்ணுக்குத் தெரியாது. இங்க இருக்குற கள்ளக்குறிச்சி போகமாட்டாராம் அமெரிக்கா போய் ஆணி புடுங்குவாராம் உன்ற கொல்டி முதல்வர்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 21, 2024 04:43

கொத்தடிமை சுதா, பெங்களூரில் குண்டுவெடித்தல் சென்னையில் திட்டம் தீட்டப்பட்டதாக கைது, சென்னை காஷ்மீரில் கலவரம் செய்வதற்காகவும், இந்தியா முழுவதும் தீவிரவாத செயல்கள் செய்யவும், சென்னை பல்கலையில் வேலை செய்த பேராசிரியர் ஆள் சேர்ப்பு பண்ணியிருக்கிறார். போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வரும் அவரது வாரிசும், ஹிந்தி/ சம்ஸ்கிருத எதிர்ப்பை செய்துகொண்டு இறுக்கினாள். இவை எல்லாம் சொரணை இல்லாத ஹிந்து கொத்தடிமை சுதாவின் கண்களுக்கு தெரியாது.


Ramesh Sargam
அக் 20, 2024 19:28

பொம்மை முதல்வர். அந்த பொம்மையை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவது சிறையில் இருந்து பெயிலில் வெளிவந்த முந்தைய முதல்வர்.