உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் சங்கர மடம் அமைந்துள்ள சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர்!

அயோத்தியில் சங்கர மடம் அமைந்துள்ள சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் காஞ்சி சங்கர மடத்தின் கிளை மடம் அமைந்துள்ள சாலைக்கு, 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹராஜ் மார்க்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.காஞ்சி சங்கர மடத்தின் கிளை மடம் உ.பி., மாநிலம் அயோத்தியின் பிரமோத்வன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மடம் அமைந்துள்ள சாலைக்கு, காஞ்சி சங்கராச்சாரியார், மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்ட, மாநகர நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கான பெயர் சூட்டு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா, அயோத்தியில் நடந்தது. மாநகர மேயர் கிரீஷ் பதி திரிபாதி, கவுன்சிலர்கள், வேத விற்பன்னர்கள், வேதபாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.மடத்தில் இருந்து அனைவரும் ஊர்வலமாக சென்று, 'ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹராஜ் மார்க்' என்ற பெயர் சூட்டிய சாலையின் பெயர்ப்பலகையை திறந்து வைத்தனர்.ஸ்ரீ ஜெயேந்திரரின் பணிகள் ஆன்மிக, சமூகப்பணிகள் பற்றியும், அயோத்தி மற்றும் ராம ஜென்மபூமி கோவில் இயக்கத்துடன் அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்பு பற்றியும் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு ரங்கன் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Modisha
ஆக 27, 2025 01:59

இங்கே திமுக ஆட்சியில் மதம்மாற்றி தினகரன் பெயரில் சென்னையில் சாலை பெயர் .


எதிர்தமில்
ஆக 26, 2025 22:06

சங்கரமடம் நாடுமுழுவதும் சிறப்பான‌ சேவைகளை செய்கிறது...


xyzabc
ஆக 26, 2025 21:36

சனாதனத்துக்கு கொடுக்கக்கூடிய மரியாதை. மகிழ்ச்சி.


K V Ramadoss
ஆக 26, 2025 20:51

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தியில் ராமர் கோவில் வருவதற்காக அகில இந்திய முஸ்லீம் போர்ட் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்த நிலையில், இரு தரப்பினர் சம்மதமும் வர இருந்த சமயத்தில், அப்போதைய மத்திய அரசு ஏனோ இந்த பேச்சு வார்த்தைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி பின் வாங்கி விட்டனர். இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தைரியமாக எந்த பெரிய முயற்ச்சியும் எடுக்கும் திறன் வாய்ந்தவர் ஸ்ரீ சுவாமிகள். பல நல்ல பொது காரியங்களுக்காக இந்தியா முழுவதும் டிரஸ்ட் டுகள் அமைத்து மக்கள் நல காரியங்களை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஜெய சங்கர ஹர சங்கர


Easwar Kamal
ஆக 26, 2025 19:45

என்ன போங்க...சேகர் பாபுவை கூப்பிட்டு இருந்தால் மக்களிடம் காசு suranduvadhu எப்படி என்று ஐடியா கொடுத்து இருப்பார். அதுல பாதி கழகத்துக்கு. இப்படித்தானே தமிழ்நாட்டில் நடக்குது கொள்ளை.


தமிழ்வேள்
ஆக 26, 2025 19:41

இங்கே இதை எதிர்த்து திராவிட நசுங்கி பிதுங்கி போன சொம்புகள், கள்ள கல்யாண கம்மிகள், இத்தாலிய அல்லேலூயா காங்கிகள், 21ஆம் பக்க ஸ்பான்சர் பெட்டிகோட் & குல்லா வகையறாக்கள் தொண்டை வெடிக்க கூவி கதறி எதிர்ப்பு சவுண்ட் விடுவானுங்களே....


Mahendran Puru
ஆக 26, 2025 19:17

சிறப்பு, மிகச் சிறப்பு. ஜெயேந்திரர் மனிதர்களுக்குள் பாகுபாடு பார்க்காதவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை