உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் அரசு இளைஞர்களின் ஆசை, கனவுகளை அழித்தது; ராகுல் குற்றச்சாட்டு

பீஹார் அரசு இளைஞர்களின் ஆசை, கனவுகளை அழித்தது; ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் இளைஞர்களின் ஆசை, கனவுகளை தேஜ கூட்டணி அரசு அழித்துவிட்டது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.பீஹார் மாநில இளைஞர்களுடன் உரையாடிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பகிர்ந்து ராகுல் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு, பீஹார் மாநில இளைஞர்களுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு பிரச்னை குறித்தும் மிகவும் சுவாரஸ்யமான உரையாடலை நடத்தினேன். மேலும், அவர்களின் அவலநிலைக்கு ஒரே ஒரு குற்றவாளி மட்டுமே இருக்கிறது. அது ஆளும் தேஜ கூட்டணி அரசு. இளைஞர்களின் கனவு மற்றும் ஆசைகளை அழித்துவிட்டது. தங்களை மாநில அரசு படுகுழியில் தள்ளி விட்டது என்பதை பீஹார் மாநில இளைஞர்கள் நன்கு அறிவார்கள். பீஹார் மாநிலம் 9-10ம் வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றலில், 29 மாநிலங்களில் 27வது இடத்தில் உள்ளது. தொழில் மற்றும் உற்பத்தித் துறையில் 23வது இடத்தில் இருக்கிறது. குழந்தை இறப்பு விகிதத்தில் 27 வது இடத்தில் இருக்கிறது. தனிநபர் வருமானத்தில் 25 வது இடத்தில் இருக்கிறது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. இவை ஒரு கண்ணாடி.இந்த பாஜ அரசு பீஹாரை முன்னேற்றத்திலிருந்து எவ்வளவு தூரம் பின்வாங்க வைத்துள்ளது என்பதைக் காட்டும் ஒரு பின்புறக் கண்ணாடி. நான் சந்தித்த அனைத்து பீஹாரி இளைஞர்களும் நம்பமுடியாத அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் புத்திசாலிகள். அவர்கள் தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பால் எல்லா இடங்களிலும் பிரகாசிக்க முடியும். ஆனால் வாய்ப்புகளுக்குப் பதிலாக, அரசு அவர்களுக்கு வேலையின்மை மற்றும் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது. மாற்றத்திற்கான நேரம் இது. நீதிக்கான மகா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய நேரம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

srinivasan
அக் 28, 2025 20:33

ஐயா, இதை ஒரு இளைஞர் சொன்னால் கூட நம்பலாம் ஆனால் நீங்கள் பாதி கிழவர் போய் வீட்டில் வேலை இருந்தால் பாருங்கள்


vbs manian
அக் 28, 2025 20:31

எழுபது வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் இளைஞர்களுக்கு என்ன செய்தது.பீஹாரிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பீகாரின் இளைஞர்களுக்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா. பீஹார் மாநிலம் என்ற அடைமொழிக்கு யார் காரணம். அங்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் காத்து நின்றது யார். இப்போது பீகாரின் கடைந்தெடுத்த ஊழல் வாதிகளோடு கூட்டு. பீகார் சீரழிவுக்கு இவர் கட்சியும் பொறுப்பு. ஏன் இந்தியா இவ்வளவு பின் தங்கியதற்கு காரணமே இவர்களின் இடது சாரி சிந்தனையும் இமாலய ஊழலும்தான்


rajasekaran
அக் 28, 2025 20:20

பிஹாரில் லல்லுவும் , உபியில் மாயவதியும் அகிலேஷும் சேர்ந்து அடித்தட்டு மக்களை முன்னுக்கு வரவிடாமல் கடந்த 50 வருடங்களாக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். அதுதான் அவர்களது சாதனை.


ஆரூர் ரங்
அக் 28, 2025 19:53

பிகாரில் இந்திரா காங்கிரஸ் ஆட்சியின் ஊழலை எதிர்க்கத் துவங்கியதுதான் ஜெயபிரகாஷ் நாராயணனின் நவநிர்மாண் இயக்கம். அதில் சேர்ந்து போராட்டம் நடத்தி புகழ்பெற்றவர்தான் லாலு . அவரே 4 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராகுலுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதாவது வழக்குகளிலிருந்து தம்பிக்க ஆட்சியை கைப்பற்ற வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஆளுக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்து உதவியுள்ளது. நல்ல ஜனநாயகம்.


பேசும் தமிழன்
அக் 28, 2025 19:06

உங்கள் கான்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் நாட்டின் நலன்களும்.... இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது..... சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தான் நாட்டு மக்கள் விழித்து கொண்டு... உங்களை ஆட்சியில் இருந்து விரட்டி அடித்தனர்.... அந்த நாள் தான் நாட்டு மக்களுக்கு உண்மையான விடுதலை நாள்.


Santhakumar Srinivasalu
அக் 28, 2025 19:32

பப்பு உங்க வண்டவாளம் எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும்! ஏமாற்ற முடியாது?


Kumar Kumzi
அக் 28, 2025 18:58

நீங்க தலைகீழா நின்று கூவுனாலும் மக்கள் உமக்கு வாக்களிக்க மாட்டார்கள்


RAMESH KUMAR R V
அக் 28, 2025 18:37

தங்களுடைய பேச்சில் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும் தென்படுகிறது.


ஈசன்
அக் 28, 2025 18:37

ராகுல் சொல்வது உண்மைதான். வேலை வாய்ப்புகள் பாஜக கூட்டணியால் உருவாக்க பட்டுவிட்டால், உழைத்தால் தான் உணவு என்ற நிலை வந்து விடும். லல்லு ஆட்சியில் நடந்தது போல் காவல் துறையை கையில் போட்டுக்கொண்டு, கொலை, கொள்ள, வழிபறி செய்து சுலபமாக சம்பாதித்து சுகமாக வாழ நினைத்த இளைஞர்களின் கனவில் மண்ணை துவிவிட்டது நிதிஷ் அரசு.


Santhakumar Srinivasalu
அக் 28, 2025 19:32

உண்மை உண்மை உண்மை !


எஸ் எஸ்
அக் 28, 2025 18:20

பீகார் மாநிலத்தில் 1990 வரை (1977-80 neengalaga) பெரும்பாலும் ஆண்டது காங்கிரஸ் கட்சி.. என்ன கிழித்தீர்கள்?


cpv s
அக் 28, 2025 18:14

who are you ragule, you can not speak about india and people no more, you get out from india