உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாமதமாக வந்த ஆசிரியையை அடித்து உதைத்த பள்ளி முதல்வர்

தாமதமாக வந்த ஆசிரியையை அடித்து உதைத்த பள்ளி முதல்வர்

ஆக்ரா: உ.பி.யில் தாமதமாக பள்ளிக்கு வந்த ஆசிரியையை , பள்ளி முதல்வர் சரமாரியா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உ.பி. மாநிலம் ஆக்ராவின் சீகானா கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றிவரும் குஞ்சன்சவுத்ரி என்ற ஆசிரியை அடிக்கடி தாமதமாக வருவதாக எழுந்த புகாரில் பள்ளி முதல்வர் பல எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.நேற்று வழக்கம் போல் ஆசிரியை குஞ்சம் சவுத்ரி தாமதமாக பள்ளிக்கு வந்துள்ளார். உடன் பள்ளி முதல்வர் அவரை கடுமையாக திட்டியும், கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது. ஆசிரியையை முதல்வர் சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து ‛எக்ஸ்' தளத்தில் பதிவேற்றினார்.அதனை 2 லட்சம் பேர் பகிர்ந்ததால் அது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இசம்பம்வ தொடர்பாக இரு தரப்பும் போலீசில் புகார் கூறப்பட்டும் போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sampath Kumar
மே 06, 2024 10:59

இதான் உp மாடல் ஹிந்தியாவிற்க்கே எடுத்து காட்டாக வாழும் காட்டுமிராண்டிகள் ஊரு என்றால் மிகை ஆகாது இந்த ஊரில் பிறந்தவன், இருப்பவன் போனவன் எல்லாம் உண்மையில் மனித குல மிருகங்களே என்று சொன்னால் மிகை இல்லை இதை வரலாறும் நிரூபித்து உள்ளது அம்புட்டு புத்திமான்கள்


Madhavan Parthasarathy
மே 06, 2024 07:35

அங்கு நிர்வாகம் இன்னும் சீர்மை அடையவில்லை பலர் வெளியே வேலை செய்துவிட்டு, அரசிலும் சம்பளம் பெறுகின்றனர் கைரேகை பதிவு, நேர பதிவு இல்லை எவ்வளவு நேரம் லேட் தெரியாது ஆசிரியைக்கு அரசியல், கூண்டா உதவி இருக்கும்


J.V. Iyer
மே 06, 2024 04:13

இரண்டு ஆசிரியைகளுடைய கணவர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது


subramanian
மே 04, 2024 22:45

கண்ணால் காண்பது பொய் தீர விசாரித்து தெளிய வேண்டும்


Saai Sundharamurthy AVK
மே 04, 2024 21:04

ஆசிரியர்கள் டிவி சீரியல்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.


Bala
மே 04, 2024 20:50

புல்லரசு வல்லரசுயல்ல நாடு ஐ நா இருக்கை வேண்டும் ?


subramanian
மே 04, 2024 22:42

ஐநா சபை உறுப்பினர் உரிமை அது ஆரம்பித்து போதே கொடுத்து விட்டார்கள் ஆனால் நேரு அதை நிராகரித்து விட்டார் நீங்கள் அரசியல் அறிய வேண்டியது ஆயிரம் உள்ளது


venugopal s
மே 04, 2024 20:46

பள்ளி முதல்வர் தம்மை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல் உள்ளது!


Ramesh Sargam
மே 04, 2024 20:18

மாணவர்களுக்கு நல்லதை போதிக்கும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் இப்படி மாணவர்கள் முன்னிலையில் சண்டை போட்டுகொண்டால், அங்கு படிக்கும் மாணவர்கள் எப்படி சிறந்த மாணவர்களாக இருக்க முடியும் நான் நினைக்கிறேன் அந்த இரண்டு ஆசிரியைகளும் தினமும் டிவி சீரியல்கள் அதிகம் பார்ப்பார்கள் போலும் உடனே அவ்விருவரும் பணியிலிருந்து நீக்கப்படவேண்டும், மாணவர்கள் நலன் கருதி


thonipuramVijay
மே 04, 2024 20:08

கும்பிபாதத்தில் ஏற்றுக அந்த முதல்வரை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை