மேலும் செய்திகள்
காற்று வேகம் நாளை குறையும்
06-Mar-2025
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று கடும் வெப்பம் நிலவியது. வெப்பநிலை அதிகபட்சமாக 37.1 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட 1.1 டிகிரி அதிகம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு மையத்தில், அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட 4.9 டிகிரி அதிகம்.காற்றில் ஈரப்பதம் 22 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை நிலவியது. இன்று வானம் தெளிவாகக் காணப்படும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியஸ் பதிவாகலாம் என கூறியுள்ளது.காற்றின் தரகுறியீடு மாலை 4:00 மணிக்கு 234 என்ற அளவில் மோசமான நிலையில் நீடித்தது. காற்றின் தரம் இன்று மிதமான நிலைக்கு முன்னேறும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது.
06-Mar-2025