உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிரியாவில் நிலைமை மோசம்; டில்லி திரும்பிய இந்தியர்கள் சொல்வது இதுதான்!

சிரியாவில் நிலைமை மோசம்; டில்லி திரும்பிய இந்தியர்கள் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சிரியாவில் நிலைமை மோசமாக உள்ளது. இருப்பினும் இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. உதவி செய்த தூதரகத்திற்கு நன்றி' என டில்லி திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இவருக்கும், பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே, கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாம் என்ற கிளர்ச்சி படை, சமீபத்தில், தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது.இதையடுத்து நாட்டை விட்டு தனி விமானத்தில் தப்பிய பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வேலை உள்ளிட்ட காரணத்திற்காக சிரியாவில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக, டில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய, இந்தியர்கள் 77 பேர், சிரியாவில் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சண்டிகரை பூர்வீகமாக கொண்ட மெக்கானிக்கல் இன்ஜினியர் சுனில் கூறியதாவது: தெருக்களில் சமூக விரோதிகள் உள்ளனர். அவர்கள் பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். நிலைமை மோசமாக உள்ளது. ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இருப்பினும் இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. எங்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் உறுதி செய்தது. அமைதியாக இருக்க வேண்டும். வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.கிரேட்டர் நொய்டாவை பூர்வீகமாக கொண்ட கபூர் கூறியதாவது: நாங்கள் சிரியாவில் ஏறக்குறைய 7 மாதங்கள் இருந்தோம். டிசம்பர் 7ம் தேதி நிலைமை மோசமடைந்தது. தீ மற்றும் குண்டுவெடிப்புகளை பார்த்தோம். இது ஒரு பீதி சூழ்நிலை. நாங்கள் மிகவும் பாதுகாப்பாக லெபனானுக்கு சென்றோம். நாங்கள் எந்த பிரச்னையும் சந்திக்கவில்லை. எங்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி மிகவும் நன்றாக இருந்தது. எங்களுக்கு உதவி செய்த வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.நாடு திரும்பிய ரத்தன் லால் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் இருக்கிறேன். நிலைமை மோசமாக இருந்தது. எப்படியாவது திரும்பி வருமாறு குடும்பத்தினர் கூறினர். கடந்த 10 ஆண்டுகளாக சிரியாவில் கண்ணாடி பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். நாங்கள் 3 நாட்கள் டமாஸ்கஸில் தங்கியிருந்தோம். எங்களுக்கு நாடு திரும்புவதற்கு இந்திய தூதரகம் நிறைய உதவிகளை செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2024 20:41

ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ஆவார்கள் ..... அப்பொழுது இந்தியாவிலும் இதே நிலை வரும் .....


S MURALIDHARAN
டிச 15, 2024 18:13

ஸ்டாலின் தான்முதலில் இந்தியர் மற்றும் தமிழர்களை அலையைது வருவார் ஏன் இந்தத்தடவை காலதாமம்


Paramasivam
டிச 17, 2024 08:01

அரசு சிறப்பு பேருந்து டயருக்கு காற்று பிடிக்க போயிருக்கு, வந்தவுடன் அனுப்பி வைப்பார்


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 15, 2024 18:03

சிரியாவில் SDFSUNNI-Kurds, HTSSUNNI-AL-QAEDA, SNA SUNNI-Turkey, ISISSUNNI, PKKSUNNI-KURDS, HEZBOLLAHLEBANON-SHIA, IRAQI-SHIA, IRAN-SHIA, PALASTINE-HAMAS, இவை தவிர இன்னும் சிறுசிறு தாதா குழுக்களும், மற்றும் பதவி இழந்த அசாத்தின் சிரியா ராணுவமும் உள்ளது. இவை தவிர போதை மருந்து, கச்சா எண்ணெய், கடத்தல் கும்பல்கள் உண்டு. இவை அனைத்தையும் இணைப்பது மதம். இவை அனைத்துக்கும் மேலாக துருக்கி ராணுவம் SUNNI, ரஷியா ராணுவம் COMMUNIST, அமெரிக்க ராணுவம் CHRISTIAN, இஸ்ரேல் ராணுவம் JEW போன்ற குழுக்களும் இருக்கின்றன.


Sudha
டிச 15, 2024 12:25

சிறிய நாட்டுக்காக உழைத்தது podhum


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 15, 2024 11:39

அரபு நாடுகளில் இன்றும் வல்லான் வகுத்ததே வாய்க்கால். அங்கு அடக்குமுறை என்பதே தினசரி நிகழ்வு. உதாரணத்திற்கு சேவல்களிடைய யார் உசத்தி, யார் அதிக பெட்டைக்கோழிகளை அடைவது என்ற சண்டை தினசரி நடக்கு. இன்று வென்ற சேவல் நாளை தோற்கும். கோழி வளர்ப்போருக்கு இது தெரியும். நாய், பூனைகளில் இருந்து அனைத்து விலங்குகளுக்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் அரபு மக்கள் இன்னும் இருக்கிறார்கள். இது அவர்களின் பிறவி குணம். சக ஆண்களை கொள்வதும், பெண்களை அடக்கி ஆள்வதும் அவர்களின் வழக்கம். அவர்களின் மதமும் அந்த எண்ணத்தை உள்ளடக்கி தோன்றியதே.


chails ahamad
டிச 15, 2024 15:10

சம்பந்தமற்ற பதிலெழுதுவதில் என்ன சுகம் கண்டீர்களோ , சிரியாவில் நடைபெற்று முடிந்த அடக்குமுறை ஆட்சியை பற்றி எழுதுவதை விட்டு , தேவையற்ற முறையில் மதத்தை சப்பந்தப்படுத்தி , கருத்து எழுதுவது சரிதானாயென்பதை பற்றி சிந்திக்கவும் .


Natarajan Ramanathan
டிச 15, 2024 10:15

எந்த நாடும் உருப்படாது.


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 08:59

பாலைவனத்தினர் திருந்துவார்களா


GMM
டிச 15, 2024 08:22

தன் மதத்தை போற்றாமல், வளர்க்காமல் பிற மதம் அழிக்கும் மத உரிமை - மனிதாபிமானமற்றவரிடம் காட்டும் மனித உரிமை அதிகம் வழங்கும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இஸ்லாம் நாடுகள், இந்திய போன்ற ஆசிய நாடுகளில் சிரியா நிலைமை உருவாகும். அமைதி, பொருளாதாரம் கெடும். சீனா, இஸ்ரேல் விழித்து கொண்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை