உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / (மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்

(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்

பாகிஸ்தான் நள்ளிரவு நடத்திய ஆளில்லா ஏவுகணை தாக்குதலை முறியடித்தது, இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, 'எஸ்.400' சுதர்சன சக்கரம்.அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க, கடவுள் மஹா விஷ்ணு கையில் சுதர்சன சக்கரம், எப்போதும் இருக்கும். மஹாபாரதத்தில் மஹாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரும் தேவைப்படும்போது, சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்துள்ளார். அதேபோல், நமது பாரத நாட்டின் பாதுகாப்புக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது எஸ்.400 எனும், ஏவுகணை எதிர்ப்பு சாதனம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=57csbbsg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒன்பது இலக்குகளை, 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை வாயிலாக, இந்தியா தரைமட்டமாக்கியது. 100 பயங்கரவாதிகள் வரை அழிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முயன்றது.

இடைமறிப்பு

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள பல ராணுவ இலக்குகளை, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி, பாகிஸ்தான் தாக்க முயன்றது. குறிப்பாக, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லுாதியானா, புஜ் ஆகிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்தது.ஆனால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, எஸ்.-400 எனும் இந்த பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் ஏவுகணைகளை வானத்தில் இடைமறித்து அழித்தது. இந்த ஏவுகணை எதிர்ப்பு சாதனம், உலகின் மிகவும் அதிநவீன நீண்ட தொலைவு வான்பாதுகாப்பு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 35 ஆயிரம் கோடி

இது இந்திய விமானப்படையின், கட்டளை (கமாண்ட்) மற்றும் கட்டுப்பாட்டு (கன்ட்ரோல்) வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எஸ். -400 பாதுகாப்பு அமைப்பும், தலா இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஆறு லாஞ்சர்கள், மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கொண்டுள்ளன. ஒரு பேட்டரியால், 128 ஏவுகணைகள் வரை இயக்க முடியும்.நமது நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து ஐந்து, எஸ். 400 வான்பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்துள்ளோம். இதில், மூன்று தற்போது செயல்பாட்டில் உள்ளன. இன்னும் இரண்டு ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள், அடுத்த ஆண்டு, நமது ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வரும். ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த பெரும் ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்துவதில், எஸ்.400க்கு பெரும் பங்கு உண்டு.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ponssasi
மே 09, 2025 12:59

இனி s400 மார்க்கட் ஏறுமுகம்தான்.


RRR
மே 09, 2025 09:46

அருமையான கட்டுரை. தினமலருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்..


Minimole P C
மே 09, 2025 07:20

If recover the assets of TN politicians, we can buy 100 numbers of S400.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 08:08

Well said.


rajan_subramanian manian
மே 09, 2025 07:17

நம்ப ஆம்னி பஸ்சை எல்லையில் விட்டு ஓட விடணும். செய்வீர்களா?


Naga Subramanian
மே 09, 2025 06:33

இது போன்ற S-400 முதல் அனைத்தையும் வாங்குவதற்கு பதில் , இனிமேல் நாமே தயாரிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்


venkatesan
மே 09, 2025 06:18

jai hind


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 06:17

இனி சொந்தமா தயாரிக்கணும் ..... ஊழல்வாதிகள், ஊழல் கட்சிகளின் சொத்துக்களை பறிமுதல் பண்ணி அந்த நிதியைப் பயன்படுத்துங்க ....


Subramanian
மே 09, 2025 07:21

அருமை. சரியாய் சொன்னீர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 08:09

நன்றி.... தேவைப்பட்டால் தேசவிரோதிகளின் குரலை ஒடுக்க எமர்ஜென்சி நிலையைக் கொண்டு வரவேண்டும் ....


முக்கிய வீடியோ