உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 மாதங்களில் 25 திருமணங்கள்; வசமாக சிக்கிய கல்யாண ராணி

7 மாதங்களில் 25 திருமணங்கள்; வசமாக சிக்கிய கல்யாண ராணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்,: அன்பான மனைவி, அடக்கமான மருமகளாக நடித்து, 7 மாதங்களில், 25 ஆண்களை ஏமாற்றி பணம், நகைகளுடன் ஓட்டம் பிடித்த, 'கல்யாண ராணி'யை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தானின் சவாய் மாதோபூரை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அனுராதா பஸ்வான், 32, என்பவருக்கும் கடந்த மாதம் 20ம் தேதி திருமணம் நடந்தது. கல்யாண தரகர் பப்பு மீனா என்பவர் வரன் பார்த்து கொடுத்தார்.

காணவில்லை

இதற்காக அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கமிஷனாக விஷ்ணு கொடுத்தார்.திருமணம் முடிந்து விஷ்ணுவை மிகவும் பொறுப்பாக பார்த்துக் கொண்டார் அனுராதா. மனைவியின் கவனிப்பில் கிறுகிறுத்துப் போனார் விஷ்ணு. அவரது வீட்டாருக்கும் பொறுப்புள்ள மருமகளாக நடந்து கொண்டார். ஊராரும், உறவினரும் பாராட்டிய வேளையில், அனுராதாவை திடீரென ஒரு நாள் காணவில்லை.வீட்டில் இருந்த 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 30,000 ரூபாய் ரொக்கம், 30,000 ரூபாய் மதிப்புடைய, 'மொபைல் போன்' என அனைத்தையும் அள்ளிக் கொண்டு அனுராதா, 'எஸ்கேப்' ஆகியிருந்தார்.விஷ்ணு அளித்த புகாரின் அடிப்படையில், அனுராதா குறித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது தான், அவர் கல்யாணம் செய்து புது மாப்பிள்ளைகளை ஏமாற்றுவதை தொழிலாக செய்து வருவது தெரியவந்தது.

ஏமாற்றம்

மாநிலம் மாநிலமாக மாறி, வேறு வேறு பெயர்களில் 25 திருமணங்கள் செய்து, இந்த மோசடியை அவர் அரங்கேற்றி உள்ளார். வரன் பார்க்கும் படலத்தில் இருந்தே இந்த ஏமாற்று வேலை ஆரம்பமாகி விடுகிறது. ஏழு மாதங்களில், 25 பேரை ஏமாற்றியது தெரியவந்தது. கல்யாண புரோக்கருமே அனுராதாவின் ஆள் தான். இதை தெரிந்து கொண்ட ராஜஸ்தான் போலீசார், போபாலில் இருந்த அனுராதாவுக்கு வலை விரித்தனர்.போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வரனாக அனுப்பி, கல்யாண தரகர் வாயிலாக திருமண ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கு வந்த அனுராதாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பல்லவி
மே 21, 2025 17:55

வடக்கன்ஸ் எல்லாம் ஒரே மாதிரி தான் இருப்பாங்க போல a1,a2………a


venugopal s
மே 21, 2025 12:16

ஏமாந்து போனவர்கள் எல்லோரும் சங்கிகளாக இருப்பார்கள், அவர்கள் தான் அடிக்கடி பாஜகவை நம்பி இப்படி ஏமாந்து போன அனுபவம் உண்டு!


gopalasamy N
மே 21, 2025 12:58

திராவிட உடன்பிரபு பெண்களை ஏமாத்தி குழந்தை கொடுத்து விட்டு அரசு துணையுடன் ஜாலியாக மேலும் பல பெண்களை கொடுத்து விடுவார் என்ஜோய்


SIVA
மே 21, 2025 15:16

கனிமொழி தந்தை கருணாநிதி என்று மருத்துவமனை பதிவேட்டில் உள்ளது , யார் அந்த கருணாநிதி என்று அபோதே ஒரு ஆர் எஸ் பாரதி மாடல் அல்லாத ஒரு பத்திரிகையாளர் கட்டுரை எழுதினார் அதற்கு அந்த பத்திரிகை யாளர் மீது வழக்கு ,


Barakat Ali
மே 21, 2025 05:56

பஸ்வான் என்றால் பட்டியலினமாச்சே ???? தமிழன் ஹிந்தியில் ஃப்ளூயன்ட்டா இருந்திருந்தா முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டிலும் இந்த அம்மணி வேலை காட்டியிருக்கும் .....


S. Gopalakrishnan
மே 21, 2025 07:16

மீனா என்பதும் பட்டியல் இனம்தான். மாப்பிள்ளை ஷர்மா. நிறைய இடிக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 21, 2025 14:19

இந்த விஷயம் இடிக்கிறதுதான் கோபாலகிருஷ்ணன் ஜி .... ஷர்மா பெரும்பாலும் உ பி / பிஹார் இரண்டில் ஒன்றைப் பூர்விகமாக உடைய பிராம்மணர்கள் .... இவர்களில் க்ஷத்திரியர்களும் உண்டென்று புரிகிறது .... வங்கத்து கோஸ்வாமியும் - ரிபப்லிக் ஆர்னப் நினைவுக்கு வரலாம், உ பி / பிஹார் பாண்டேவும் - சாணக்யா ரெங்கராஜ் நினைவுக்கு வரலாம், கோவில் குருக்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ....


சாமானியன்
மே 21, 2025 05:51

அங்கேயுமா பெண்கட்கு பஞ்சம் ? இவ்வளவு மோசமாக இப்படியும் நடக்குமா ? கொஞ்சம் கூட பயம் இல்லையா ? அந்த 25 பையன் பெற்றோர்கள் பெண்ணைப் பற்றி எதுவுமேயா விசாரிக்கவில்லை ? ஈஸ்வரா !


Senthoora
மே 21, 2025 03:52

என்னமோ சொன்னாங்க தமிழ்நாடுதான் குட்டி சுவர் அச்சுஎன்று, அதுவும் நம்ம தமிழனே சொல்லி சேறு பூசினாங்க.


Kasimani Baskaran
மே 21, 2025 03:50

நடிகையர் திலகம் என்று பட்டம் கொடுத்தால் கூட குறைவுதான். 25 குடும்பங்களை நம்பவைத்தது சுத்தமான நடிப்பு.


சண்முகம்
மே 21, 2025 03:47

25 சோணகிரிகளா ஏமாந்தவங்க? காய்ந்து கிடந்தார்களா?


மீனவ நண்பன்
மே 21, 2025 02:51

காஞ்சமாடு கம்பங்கொல்லையில் பூந்த மாதிரி இந்த மாப்பிள்ளைகள் இருந்திருப்பாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை