உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணப்பெண்ணுக்கு வந்த போன் கால்; முகூர்த்த நேரத்தில் நின்ற திருமணம்

மணப்பெண்ணுக்கு வந்த போன் கால்; முகூர்த்த நேரத்தில் நின்ற திருமணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹாசன் : கர்நாடகாவில், தாலி கட்டும் நேரத்தில் வந்த காதலனின் போன் அழைப்பை அடுத்து, மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகாவில் வசிப்பவர் வேணுகோபால், 28; அரசு பள்ளி ஆசிரியர். பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பல்லவி, 24; முதுகலை பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார்.இருவருக்கும் ஹாசன் நகரின் ஆதிசுஞ்சனகிரி மண்டபத்தில் நேற்று காலை 8:45 மணிக்கு திருமணம் நடக்கவிருந்தது. விருந்தினர், உற்றார், உறவினர் மண்டபத்தில் திரண்டிருந்தனர்.மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். தாலி கட்டும் நேரத்தில், மணமகள் பல்லவிக்கு மொபைல் போனில் ஒரு அழைப்பு வந்தது. போனுடன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டு கொண்டார். சில நிமிடங்களில் வெளியே வந்த அவர், 'எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை' என்றார்.இதனால் இரண்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பல்லவிக்கு பெற்றோர் புத்திமதி கூறி, திருமணத்துக்கு சம்மதிக்கும்படி மன்றாடினர். ஆனால் அவர், தான் வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாக கூறி, அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார்.போலீசார் வந்து பேசியும், மணமகள் மனம் மாறவில்லை. கடுப்பான வேணுகோபாலும், தனக்கு திருமணம் தேவையில்லை என, கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். இரண்டு குடும்பத்தினரும் மண்டபத்தை காலி செய்து சென்றனர்.மணமகன் உறவினர் ஒருவர் கூறுகையில், 'திருமணத்துக்கு மணமகனின் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளனர். இதை திரும்ப பெறுவதற்கு போலீசார் வாயிலாக பேச்சு நடக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sivak
மே 29, 2025 14:45

சினிமாவால் சீரழிவு ..


Natchimuthu Chithiraisamy
மே 26, 2025 11:02

காதலன் ஏன் மனம் மாறி போன் செய்தான். மணமகன் தப்பித்தான் இல்லையெனில் குடும்பம் நடப்பதை இவன் பார்க்கவேண்டிருக்கும். செய்தி கேட்ட காதல் பெண்களே கல்யாண மண்டப செலவை பெற்றோர் தலையில் சுமத்தி அவர்களை வேதனை பட வைக்காதீர்கள்.


T.Senthilsigamani
மே 25, 2025 06:35

சபாஷ் இப்படித்தான் பெண்ணுரிமை வாதிகள் பேசுகிறார்கள் .பெற்றோர்களின் பாடு தான் திண்டாட்டம்


Mumtaj Niju Niju
மே 24, 2025 21:13

வாவ்


K V Ramadoss
மே 24, 2025 21:04

அட அபசகுணமே


என்றும் இந்தியன்
மே 24, 2025 18:51

மணமகன் நீ நிம்மதியாக இரு???இதுவே ரெண்டு நாள் கழித்து வந்திருந்தால் பெண் ஓடிப்போய் உனது வாழ்க்கை ஒரே சோகமயமாக ஆகியிருக்கும். எனவே நிம்மதியாக இரு


venugopal s
மே 24, 2025 17:55

எனக்கு என்னவோ இந்த திருமணம் அதிமுக பாஜக கூட்டணியை ஞாபகப் படுத்துகிறது!


sasidharan
மே 24, 2025 14:41

இது முழுக்க முழுக்க பெற்றோர் தவறே நிச்சயம் செயுயும்போதே பெண்ணிடம் விளக்கமாக கேட்டு அதன் பின் திருமணத்திற்க்கு முடிவு செய்து இருக்கலாம்


Suresh Sivakumar
மே 24, 2025 12:00

Thollai vittudhu. This is what exposure to todays world does.


Pakkiri Jayaram
மே 24, 2025 09:26

அம்பாஜவல்லி மேடம் சரியா சொல்லி இருகாங்க.