உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விருந்துக்கு வந்த இடத்தில் கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

விருந்துக்கு வந்த இடத்தில் கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

சிக்கமகளூர்: உறவினர் வீட்டு விருந்துக்கு வந்த பெண் ஒருவர், எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்து, இரவு முழுதும் உதவி கேட்டு அழுது கொண்டிருந்தார்.சித்ரதுர்கா, ஹொள்கரேவின், சிக்கஜாஜுர் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மக்கா, 40. இவர் தன் உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சிக்கமகளூரு, அஜ்ஜம்புராவின், தடகா கிராமத்துக்கு நேற்று முன் தினம் வந்திருந்தார். இரவு அங்கு தங்கினார்.உறவினர் வீட்டருகில் தடுப்பு சுவர் இல்லாத கிணறு உள்ளது. இரவு கால் தவறி 20 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் விழுந்தார். அங்கிருந்த கல்லை பிடித்துக் கொண்டு, உதவி கேட்டு கூச்சலிட்டார். ஆனால் இவரை யாரும் கவனிக்கவில்லை.நேற்று காலை கிணற்றில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டதை கவனித்த சிலர், உள்ளே எட்டிப் பார்த்தபோது, திம்மக்கா விழுந்திருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், திம்மக்காவை மீட்டனர். பலத்த காயம் இருந்ததால், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !