உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்வமுடன் வந்த பெண்கள்!

ஆர்வமுடன் வந்த பெண்கள்!

தலைநகர் டில்லியில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க, நேற்று நடந்த சட்டசபைத் தேர்தலில், டில்லி மக்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர். காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியதில் இருந்தே பெண்கள், முதியோர் மற்றும் முதன்முறையாக ஓட்டுப் போடும் இளம்பெண்கள் ஆர்வமுடன் வந்தனர். இருப்பினும் காலை 9:00 மணி வரை 8 சதவீத ஓட்டுக்களே பதிவாகி இருந்தன. அதன்பின், வாக்காளர்கள் சரசரவென ஓட்டுச்சாவடிகளில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுக்களைப் பதிவு செய்தனர். மாலை 5:00 மணிக்கு 57 சதவீதமாக உயர்ந்தது.ஜனாதிபதி திரவுபதி முர்மு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, துணைநிலை கவர்னர் சக்சேனா, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், முதல்வர் ஆதிஷி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, மாநரக போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, டில்லி தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் ஆகியோர் காலையிலேயே தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ