உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 28 தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்களே இல்லை

28 தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்களே இல்லை

தாவணகெரே, : ''கர்நாடகாவின் 28 லோக்சபா தொகுதிகளிலும், காங்கிரசுக்கு வேட்பாளர்களே இல்லை,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுக்காச்சார்யா கிண்டல் அடித்தார்.இது குறித்து, தாவணகெரேவில், நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, 9 மாதங்கள் ஆகின்றன. இதுவரை ஆட்சி நிர்வாகம் 'டேக் ஆப்' ஆகவில்லை. ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு வேட்பாளர்களே இல்லை. அனைத்து தொகுதிகளிலும் அமைச்சர்களையே போட்டியிட வைப்பது காங்., திட்டம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இண்டியா கூட்டணியின் பல கட்சிகளில் வெளியே வந்துள்ளன.தங்கள் தோல்விகளை மறைப்பதற்காக, மத்திய அரசை கண்டிப்பதாக கூறி காங்., போராட்டம் நடத்துகிறது. நாட்டை பிளவுப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை