உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை

எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாக தெரிவித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, ''எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு,'' என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்பட்டம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தார். இதை மத்திய அரசு மறுத்தது.மத்திய பிரதேசத்தின் போபாலில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து அழைப்பு வந்ததும், உடனடியாக பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்' என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ராகுலின் இந்த பேச்சை, பாக்., ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மேலும், அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பும், சரணடைந்து விட்டதாக இந்தியா ஒப்புக் கொண்டதாக உளறினார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்ப் அணிந்த சிவப்பு நிற தொப்பியை, சமூக வலைதளத்தில், காங்., வெளியிட்டது. அதில், 'நரேந்திரர் சரணடைந்தார்' என்ற வாசகம் இருந்தது.

முட்டாள்தனம்

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகாரத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு நேற்று கூறுகையில், ''முட்டாள்தனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஓர் எல்லை உண்டு. எதிர்க்கட்சி என்பது, நாட்டை எதிர்ப்பதற்கு அல்ல என்பதை ராகுலிடம் சொல்ல, காங்கிரசில் ஒருவர் கூட இல்லையா?'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rathna
ஜூன் 06, 2025 11:51

இந்த வியாதி பெயர் Angelman Syndrome. வயதிற்கு தகுந்த முதிர்ச்சி இன்மை, மூளை செயல்பாடு குறைவு. 2029 லும் பிஜேபி தான் போல?


Dharmavaan
ஜூன் 06, 2025 09:03

முதிர்ச்சியற்ற சின்ன பையன் ராகுல்கான் .நாட்டின் சாபக்கேடு இவனை நம்பி ஒட்டு போடும் மூடர்கள் தேச விரோதிகள்


VENKATASUBRAMANIAN
ஜூன் 06, 2025 07:50

காங்கிரஸ் அழிக்க இவர் ஒருவரே போதும். யாரோ இவருக்கு தவறாக எழுதி கொடுக்கிறார்கள்.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2025 07:49

LKG படிக்கும் அளவுக்கு அறிவுள்ள ஒருவரை.. எதிர்க்கட்சி தலைவர் ஆக்கினால்.... இப்படி தான் நடந்து கொள்வார்.. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி.. ஆனால் இங்கே ஆள் மட்டும் தான் வளர்ந்து உள்ளது..... ஆனால் அறிவு....?


புரொடஸ்டர்
ஜூன் 06, 2025 07:48

இந்தியாவில் சீன ஆக்கிரமிப்புக்கு எல்லை இல்லையா கிரண் ரிஜ்ஜு?


RATNAM SRINIVASAN
ஜூன் 06, 2025 09:53

சீனாவுக்கு நிலத்தை விட்டுக்கொடுத்ததே காங்கிரஸ் தானே


vivek
ஜூன் 06, 2025 13:57

protestor is dumb of dumbster...


srinivasan
ஜூன் 06, 2025 07:45

காங்கிரசில் உள்ள அறிவு மிக்கவர்களை அறிவு குறைபாடு உடைய ராகுல் மேல வர அனுமதிப்பதில்லை. ஆகையால் ராகுல் என்கின்ற பப்பு இப்படித்தான் உளறிக் கொண்டு இருப்பார். இவரை கோர்டின் மூலம் ஒரு இரண்டு வருடமாவது உள்ளே தள்ளினால் தான் பேசாமல் இருப்பார்.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2025 07:44

இத்தாலி பப்புவுக்கு நம் நாட்டின் மீது எப்போதும் பற்று இருந்ததில்லை.. அவரது பற்று முழுவதும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது தான்.. அவரது பேச்சுக்கள் அனைத்தும் அதனை தான் பிரதிபலிப்பது போல் இருக்கிறது.


Muthukrishnan
ஜூன் 06, 2025 07:18

அப்படியா?? ஓகே OK


Kasimani Baskaran
ஜூன் 06, 2025 03:58

இன்னும் அடித்து துவைத்து இருக்க வேண்டும். தீவிரவாதிகளை தப்பிக்க விட்டுவிட்டு அவர்களின் உள்கட்டமைப்புக்களை மட்டும் அழிப்பதில் தீவிரவாதம் ஓரளவுக்குத்தான் குறையும். அணுவாயுதங்களை முழுவதுமாக அழித்திருக்க வேண்டும். இல்லை என்றால் பாகிஸ்தான்தான் அமைதியான நாடு - இந்தியா வம்பு செய்கிறது என்று உருட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.


சிட்டுக்குருவி
ஜூன் 06, 2025 03:39

ராகுலுக்கு நாட்டில் என்ன நடக்குது என்பதே அவருடைய அறிவிற்கு எட்டாததாக உள்ளது .உலகம் முழுவத்திற்ற்கும் எங்கள் குறிக்கோள் பயங்கரவாத முகாம்களை அழிப்பதே .பாகிஸ்தான் உடன் போர் அல்ல என்று அறிவிப்புகளை இந்தியா அறிவிற்றுக்கொண்டே இருந்தது .பாக்கிஸ்தான் போர் துடங்கின உடனே தான் நம் நாடு தர்காக்க வேண்டி இருந்தது .பாக்கிஸ்தான் பேரழிவை சந்தித்த உடனே அமெரிக்காவிற்கு ஓடியது .அமெரிக்கா நம்மிடம் பேசும்போது பாகிஸ்தான் கேட்டால் போரை நிறுத்துவோம் என்று கூறினோம் .பாகிஸ்தானிடம் இருந்து நிறுத்தும்படி வேண்டுகோள் வந்த உடனே நிறுத்தினோம் .என்று விளக்கம் கொடுக்கப்பட்டது .மேலும் நமது பிரதமர் உலகம்முழுவதிலும் அமைதி ஏற்படுத்தவும் போர்களை தடுக்கவும் அரும்பாடு பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றார் .அதனால் உலகம் முழுவத்திற்ற்கும் நல்லெண்ண தூதுவராக காணப்படுகிறார் .அப்படி இருக்கும்போது ராகுல் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது .நமதுநோக்கம் போர் அல்ல .உலகம் முழுவத்திற்ற்கும் அமைதியே .இதை அறிவு கூர்ந்த மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுலுக்கு எடுத்துரைக்கவேண்டும் .இந்த சிற்றறிவு கூட இல்லையென்றால் எதிர்கட்சி தலைவராக கூட தகுதி இல்லையென்றே கருதலாம்.


புதிய வீடியோ