உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது: பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது: பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- டில்லி சிறப்பு நிருபர் - கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்., 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

மனு தாக்கல்

இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது. மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது. ''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார். இதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ்

பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம்

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர். அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

JAYAKUMAR KVP
டிச 13, 2025 20:05

கட்டுப்பாடு இல்லாத கூட்டம்40 உயிர் கள் பறிப்போன பின்னும் புத்தி வராத காட்டு மிராண்டி கள் இவனுகளுக்கு கட்சி ஒரு கேடு


Rithul
டிச 13, 2025 19:41

Lawyer fees 1.5 Crores gone to drain ?


ஆசாமி
டிச 13, 2025 20:26

வில்சன் திமுக கட்சிக்காரர். சும்மாவே வாதாடுவாரா


Chess Player
டிச 13, 2025 19:26

உண்மையை வெளில சொல்லமாட்டேங்கிறாங்க. தி மு க இப்போ உச்ச நீதிமன்றம் நீதிபதியை நீக்க கை எழுத்து வாங்குவானுக. நீட் கை எழுத்து வாங்கி விளக்கு வாங்கியாச்சு. அடுத்து நீதிபதியெல்லாம் கை எழுத்து வாங்கி நீக்கி கிழிப்பாங்க


ராமகிருஷ்ணன்
டிச 13, 2025 17:25

திமுகவினருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் டிஸ்மிஸ் தான்


M SUBBU
டிச 13, 2025 13:49

கரூர் துயரம் காரணம் யார் காட்டாற்று வெள்ளம் கரை தாண்டும்போது காகித ஓடமாய் நாம் மாறும்போது கரையேற வழிமறந்து, வாழ்வு கனவாகி காற்றுக்குமிழாய் உயிர் கரையும்போது கண்ணீர்தாரை எங்கென ஓயும் கதறல்தானா நம் வாழ்வின் மிச்சம் கடவுள் மறுத்துவிட்டோம் இறைநம்பிக்கை நமக்கெதுக்கு இறைவனே இல்லையெனும்போது நல்லொலுக்கம் விட்டொளித்தோம் மாதா, பிதா, குரு, தெய்வம் தினம் போற்றி எதுசெய்திடினும் இறைவன் துணைபோற்றி கடவுள் இல்லா காரியம் இல்லையென காணும் இடமெல்லாம் கோவில்கட்டி அலைபாயும் மனதிற்கு பக்தியெனும் வழிகாட்டி, சுயகட்டுப்பாடு யெனும் கடிவாளமிட்டு கரைசேர்ந்தார் நம்முன்னோர் மற்றோர், சுற்றோர் சமமென போற்றி நட்பையும், பண்பையும் நாளும்பேணி வீரத்தில், எதிர்த்தவர் இல்லா இனமாய் அள்ளிகொடுத்து அரவணைத்து சங்கம் வைத்து தமிழாய் நின்று இலக்கியம் காத்த தமிழினம் இன்று கடவுள் மறுத்தார் ஏன் மறுத்தார் இடைச்செருகலாய் வந்த இனவேற்றுமை களையாய் முளைத்து கடவுளை மறைத்து மற்றோர், சுற்றோர் பேதம் கண்டு சாதிக்கொடுமை தலைவிரித்தாட… சரிசெய்ய நினைத்தோர் களையெடுக்காமல் கடவுளை மறைத்தார், களைவளர்த்தார் இறைவனே இல்லையெனும்போது கடிவாளம் நமக்கேன், எறிந்தோம் இறுமாப்பு தலைக்கேற இனம் மறந்தோம் வழிபாடு தொலைத்து வழிமறந்தோம் அரிதாரம் பூசியோர் ஆண்டவரானார் அத்தனை சடங்கிற்கும் மூலவரானார் அபிஷேகம் தினம்பெற்று கடவுளானார் களையை கடவுளாக்கி களைவளர்த்தோர் சாதிக்க, ஒளவையும், வள்ளுவரும் காத்த தமிழ்மரபு தள்ளாடி திண்டாடுதே அரிதாரம் பூசியவன் அவதாரம் அவர்தம் காலடி மண்ணே திருநீறு அவர் சொல்லே நமக்கு ஆத்திசூடி பொம்மலாட்ட பொம்மைக்கும் இந்த அரிதார புருஷருக்கும் வேறுபாடு இல்லையென அறிவிலிகள் உணரட்டும்... அரிதார புருஷரும் தாமொரு பொம்மை என்றுணர்ந்தால் போய்விடும் பொய்வேசம் புலிவேசம் போட்டவன் புலியல்ல புலியாய் நினைத்து சதிசெய்தால் காற்றுக்குமிழாய் கரையும் உயிர்கள் ஏனெனில் களைவளர்த்தோர் பூமியிது கட்டுப்பாடு ஏதுமில்லை கடவுள் பயம் நமக்கில்லை


பாலாஜி
டிச 13, 2025 13:14

தவெகவுடன் கூட்டணி ஏற்படுத்த கரூர் தவெக மாநாட்டில் பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்த விபத்து பற்றி சிபிஐ விசாரணை தவெகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்வதற்கு பாஜக முயற்சிக்கிறது.


Chess Player
டிச 13, 2025 19:27

இந்த மாதிரி கருது போட வெக்கமா இல்லையா


ஆசாமி
டிச 13, 2025 20:27

சோத்தை தின்னு பழகு


ஆசாமி
டிச 13, 2025 20:29

இப்ப கொத்தடிமைகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்க கொடி தூக்குவானுங்க. இல்லைன்னா இது்பிஜேபி சதின்னு கூப்பாடு போடுவானுங்க.


Barakat Ali
டிச 13, 2025 12:38

டிவிக்கே மீது பழிபோட்டுத் தப்பிக்க திராவிட மாடல் முயற்சி ....... திராவிட மாடலைக் காப்பாற்ற திராவிடநீதி டிபார்ட்மென்ட் முயற்சி ....


angbu ganesh
டிச 13, 2025 12:28

ஒன்னும் குழப்பம் இல்ல செஞ்சது யாருன்னு எல்லாருக்குமே தெரியும் இது விஷ தீயமுகவும் விஜயும் சேர்ந்து செஞ்ச டிராமா இவனுங்கள தண்டிக்க ஏன் இவ்ளோ தாமதம்


ஆரூர் ரங்
டிச 13, 2025 12:03

தனது அதிகார எல்லையைத் தாண்டி மதுரை அமர்வின் எல்லைக்குள் நடந்த நிகழ்வை சென்னை மன்றம் விசாரித்தது சரியான செயலாகத் தெரியவில்லை . பின்புலத்தில் அதிகார நபர்கள் இருப்பதாக தோன்ற வைக்கும்.


Madras Madra
டிச 13, 2025 10:42

திராவிட ஓநாய்கள் நீதி துறை முழுவதும் ஊடுருவி விட்டது போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை