உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டை விட உயர்ந்த அமைப்பு எதுவும் கிடையாது

பார்லிமென்டை விட உயர்ந்த அமைப்பு எதுவும் கிடையாது

புதுடில்லி : மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மீண்டும் தன் தாக்குதலை தொடர்ந்துள்ளார்.''பார்லிமென்டைவிட உயர்ந்த அமைப்பு கிடையாது. அதன் உறுப்பினர்களாக உள்ள, எம்.பி.,க்கள் தான், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் எஜமானர்கள்,'' என, அவர் கூறியுள்ளார்.

நடவடிக்கை

மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவதில் கவர்னர் தாமதம் செய்வதாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்தது.மேலும், கவர்னர்கள் அனுப்பும் மனுக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றம் தன் வரம்பை மீறியுள்ளதாக கூறினார். மேலும், ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியாது என்றும், ஜனநாயக அமைப்புகள் மீது உச்ச நீதிமன்றம் அணு ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது என்றும் கடுமையுடன் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரும், உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தனர்.இந்நிலையில், டில்லி பல்கலையின் சட்ட மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நான் கூறியதற்கு சிலர் விமர்சித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்ட பதவியில் உள்ள நான் பேசியது அனைத்தும் நாட்டின் நலனுக்காகவே.அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என்று கூறியது உச்ச நீதிமன்றம். அதே உச்ச நீதிமன்றம், அதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.நாட்டின் ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக கருதப்படும் எமர்ஜென்சி, 1975ல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், மக்களுக்கான அடிப்படை உரிமைகளை முடக்கி உத்தரவிடப்பட்டது. அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது என, ஒன்பது உயர் நீதிமன்றங்கள் கூறின.இதை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம், 4:1 என்ற பெரும்பான்மை உத்தரவில், அடிப்படை உரிமைகளை மறுக்கலாம் என்று கூறியது.அப்போது, எதிர்ப்பு உத்தரவு பிறப்பித்தவர் நீதிபதி எச்.ஆர். கன்னா. இவர் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் உறவினர்.அவ்வாறு அரசுக்கு எதிரான உத்தரவு பிறப்பித்ததால், தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு அவருக்கு அப்போது மறுக்கப்பட்டது.அதன்பின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என்று உத்தரவிட்டது.இவ்வாறு மாறுபட்ட உத்தரவுகள் வழங்கினாலும், அரசியலமைப்புச் சட்டம் குறித்து எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை. இதில் இருந்து அரசியலமைப்புச் சட்டம்தான் மிகவும் உயர்ந்தது.

தோல்வி

அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்துள்ள பார்லிமென்டைவிட உயர்ந்த அமைப்பு இருக்க முடியாது. அதன் உறுப்பினர்களாக உள்ள, எம்.பி.,க்கள் தான், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் எஜமானர்கள்.எமர்ஜென்சியை அறிவித்த, காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா, 1977ல் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதில் இருந்து, அரசியலமைப்புச் சட்டம் என்பது மக்களுக்கானது என்பது ஊர்ஜிதமாகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க் கள் அடங்கிய பார்லிமென்ட், அதன் பாதுகாவலனாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

நீதித்துறையை மதிக்கிறோம்!

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் உயர் வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, ஜனநாயகத்தின் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். நீதித்துறை மீதான மரியாதை உயர்ந்ததாகும். நீதித்துறையின் சுதந்திரத்தை மதிக்கிறோம்.நீதித் துறையும், சட்டம் இயற்றும் பார்லிமென்டும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நீதித்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

'தினமும் தாக்குதல் நடக்கிறது'

ஒரு பக்கம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் இது தொடர்பான தன் வருத்தத்தை தெரிவித்து வருகிறது.நேற்று முன்தினம் இரண்டு வழக்குகளின் விசாரணையின்போது, நீதித்துறை மீதான தாக்குதல்களுக்கு நீதிபதி பி.ஆர். கவாய் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றங்களுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருவது குறித்து வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.''நீதித்துறை மீது தினமும் தாக்குதல் நடக்கிறது. இது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை,'' என, நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
ஏப் 23, 2025 20:09

உச்ச நீதி மன்றம் தற்போது தடு மாற்றத்தில் உள்ளது.


Dharmavaan
ஏப் 23, 2025 18:40

தேசவிரோதிகள் தேசத்துரோகிகளுக்கு ஆதரவான நீதிமன்றம் கட்டுப்படுத்த பட வேண்டும் இல்லையேல் நாட்டுக்கு பெரும் ஆபத்து மோடி துணிந்து இதுபோன்றவர்கள் இம்பீச் செய்யவேண்டும். இந்திரா காந்தி செய்திருப்பார்


THOMAS LEO
ஏப் 23, 2025 16:38

We will agree When All MPs minimum qualification DEGREE PASS.


V.Ravichandran
ஏப் 23, 2025 15:04

கல் எறிந்தவர்கள் மீது பச்சாதாபம் காட்டிய வர்கள் தானே


TRE
ஏப் 23, 2025 13:36

பிஜேபியில எல்லாப்பயலும்....


T.S.SUDARSAN
ஏப் 23, 2025 10:55

நீதிமன்றங்களை கலைத்துவிடலாம். ஊழல் பெருத்துவிட்டது


எம். ஆர்
ஏப் 23, 2025 09:54

ஆமா ஆமா பார்லிமென்ட்டை ஈஃபில் டவர்க்கு மேலே கட்டினால் அதை விட உயர்ந்தது எதுவும் இல்லைதான்


Thirumal s S
ஏப் 23, 2025 07:04

எலெக்ட்ரோல் பாண்ட் கொண்டு வரவா


spr
ஏப் 23, 2025 06:35

ஆளுநரோ குடியரசுத்தலைவரோ எந்த ஒரு நிகழ்வைக் குறித்தும் குறிப்பிட்ட காலத்தில் முடிவெடுக்க வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதனைப் பரிந்துரையாகச் சொல்லலாம் ஆணையிட முடியாது ஆனால் இப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் வாய்ப்பில்லை என்றால், அவர்களின் தீர்ப்புக்கள் இது போலத்தான் இருக்கும் ஆளுநரோ, குடியரசுத்தலைவரோ நீதிபதிகளோ எவராயிருந்தாலும் அவர்கள் பதவியில் இருக்கும் வரையில் அவர்கள் மேல் அவர்களின் பணி குறித்த முடிவுகளை எதிர்த்து வழக்கோ தண்டனையோ கூடாது என்பது முறையானது ஆனால் பணி ஒய்வு பெற்றபின் அவர்களும் சாமான்யர்கள் தான் அவ்வகையில் அவர்கள் செயல்பாடுகள் இறையாண்மைக்கு எதிராக இருக்குமானால் அவர்கள் மேலும் வழக்குப் பதியவும் விசாரணை செய்து தண்டனை வழங்கவும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகளின் நிர்வாகச் செயல்பாடுகளில் நீதிமன்றம் தேவையற்றுத் தலையிட அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு ஐந்து பேர் கொண்ட அமைப்பால் ஆராயப்பட்டு தீர்ப்பு வழங்கவும் ஏற்றபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் சட்டமாக ஆன பின் அதில் அரசியல் சாசன அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக இருந்தால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் மறு பரிசீலனை செய்யப் பரிந்துரை செய்து அமுல்படுத்தலாம் என்று சொல்ல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் அண்மையில் செய்தாற்போல ஆளுநர் அனுமதிக்காத சட்டம் தானியங்கு முறையில் சட்டமாகும் என்று சொல்ல அவர்களுக்கு உரிமையில்லை என்றும் மாற்றப்பட வேண்டும் இல்லையேல் நாளை ஆளுநர் பதவியோ குடியரசுத்தலைவர் பதவியோ தேவையில்லை என்று மசோதா நிறைவேற்றப்படுமானால் அதுவும் அவர்களால் மறுதலிக்க முடியாது என்ற நிலை அனுமதிக்க வேண்டுமா


Dr.C.S.Rangarajan
ஏப் 23, 2025 04:19

நீதிமன்றங்களில், குறிப்பாக, உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ கருமமே கண்ணாயினர் என்ற நிலையில் செயல்படுவது போற்றத்தகுந்தது இல்லையா.? ஆங்கில கவிப் பேரரசு ஷேஸ்பியர் குறிப்பிடுகிறார் ஒருவர் தனது வாழ்க்கையின் இந்த தருணத்தில் சமூக மட்டத்தில் தாழ்ந்தவராக இருந்தாலும்,சிலர் பிறக்கும்போதே அருமை பெருமையுடன் பிறக்கிறார்கள், சிலர் அருமை பெருமைகளை சாதனையால் பெறுகிறார்கள். அருமை பெருமைகள் சிலர் மீது திணிக்கப்படுவதால் சிலர் பெறுகிறார்கள். இந்த கூட்டு கலவையால் உருவான மக்களவை அங்கத்தினர்கள் யார் யார் எல்லாம் மக்களவை நிகழ்வுகள் இன்று போனாலென்ன, நாளையும் அதற்குப்பின் பலநாட்களும் இருக்கின்றன என்று செயல்பட்டால் அதுதான் ஜனநாயகமா? காலமும் நேரமும் பொன்னாக நீதிமன்றங்கள் கருதும்போது மக்களவையில் பொழுதுபோக்கும் நிலையங்களாக செயல் படவா மக்கள் தங்களின் பொன்னான வாக்குகளை பொன்னான நேரத்தினையும் செலவிட்டு மக்களவைக்கு அங்கத்தினராக சிலரை தேர்வுசெய்தனர்? மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஒவ்வாத மக்களவை அங்கத்தினரை திரும்பிப்பெறும் சட்டம் என்றிருந்தால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுமோ?


baala
ஏப் 23, 2025 09:33

மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பவர்கள். அதுதான் இதனை. குடிக்கும் தண்ணீர் வரை மக்கள் பணம்,


V.Ravichandran
ஏப் 23, 2025 15:06

தவறு ஜனதிபதி முதல் குடிமகன் அவருக்கு உத்தரவு இட முடியாது ,


முக்கிய வீடியோ